
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் அட்டை கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்திருக்கும் உத்தரவில்,
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனை செய்ய வருபவரிடம், ஆதார் எண், பெயர், செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்டிப்பாகக் கேட்டுப் பெற வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும்பட்சத்தில், அவர்களை, கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு முன்பே, அவரது செல்லிடப்பேசி எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
இது குறித்த விவரங்களையும் சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் அரசு மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்கள் என 23 ஆய்வகங்கள் செயல்படுகின்றன