
முடி வெட்டிக்க போறீங்களா..? அப்படின்னா… இனி ஆதார் அட்டையுடன் போங்க..!
மதுரை மாவட்டத்தில் உள்ள பல முடித்திருத்தகங்களில், கடைக்கு வருவோரிடம் ஆதார் கார்டை வாங்கி, பதிவேட்டில் பதிவு செய்த பின்னரே தாங்கள் பணியை தொடர்கின்றனர்.
இது குறித்து மதுரை கோரிப்பாளையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் கூறியது: தமிழக அரசு உத்தரவிட்டது போல, முடிதிருத்தகங்களில் நாங்கள் ஆதார் அட்டை இன்றி பணி செய்வதில்லை. பெரும்பாலும், பலர் ஆதார் அட்டையை கொண்டு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.
இருந்தபோதிலும், அட்டை இல்லாமல் வருவோரை திருப்பி அனுப்பியும் வருகிறோம். இதற்கு என, கடையில் ஒருவரை நியமித்தால் தான், பணிகளை விரைவாக செய்யமுடியும் என்றார்.
கிராமங்களை பொறுத்தவரை, கொரோனாவுக்கு பயந்து பலர் முடித்திருத்தகத்துக்கு சலூன் வரத் தயக்கம் காட்டி வருகின்றனர். நகர் பகுதியில் மாஸ்க், கையூறைகள் அணிந்து பலர் சலூன்களுக்கு வருவதை காணமுடிகிறது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை