இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பூசாரிகள் தற்காலிக பணி நீக்கம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை
irukkankudi mariamman
irukkankudi mariamman

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

இங்கு சித்திரை, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் மக்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வர்
இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி பித்தளை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் அங்கவஸ்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்

இந்நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பொருட்கள் முறையாக கணக்கில் கொண்டு வரப்படுவதில்லை என வந்த புகாரையடுத்து கோவிலில் உள்ள CCTV யின் காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த இருக்கன்குடி மரியம்மன் கோவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் கருணாகரன் கோவில் பூசாரிகள் 15.12.2019 அன்று காணிக்கைப் பொருட்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகியிருந்தது

irukkankudi mariamman
irukkankudi mariamman

இந்த காட்சியின் அடிப்படையில் கோவில் பூசாரிகள் ராமர் பூசாரி கதிரேசன் பூசாரி அரிராம்பூசாரி ஆகிய 3 பூசாரிகளையும் கோவில் பூஜை மற்றும் விழாக்களில் பங்குபெற தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுமட்டுமா அல்லது இதுபோன்று தொடர்ந்து வேறுஏதும் மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா? என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகளே கையாடல் செய்து பங்கிட்டுக் கொள்ளும் செய்தி அறிந்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.