
தமிழகத்தில் கொரோனா அரசியல் வந்தாலும் வந்தது… தந்தையும் மகனுமாக சேர்ந்து மக்களை ரொம்பவே கன்ப்யூஸ் பண்றாங்களே! ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுகாதாரத்துறை செயலர் மாற்றம் குறித்த இவர்களது கருத்துகளுக்கு எதிர்வினை கடுமையாகவே இருக்கிறது
நேற்று மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்விட்டர் பதிவில் பாவம் கொரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது என்று குறிப்பிட்டிருந்தார் இந்த நிலையில் இன்று தந்தை மு க ஸ்டாலின் தன் போக்குக்கு சுகாதாரத்துறை செயலர் மட்டும் மாற்றினால் போதுமா அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டாமா என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்
கொரோனா வைரஸ் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த கொரோனாவை தடுப்பதற்காக மாநில அரசும் அரசின் சுகாதாரத் துறையும் சென்னை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் எண்ணிக்கை தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு மீண்டும் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு ராதாகிருஷ்ணன் சுகாதார செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து நடிகர் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் ஆக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருக்கும் கருத்து…
ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா நியமனம். அதே ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னைக்கு ஒரு குழு. 6 அமைச்சர்கள் கொண்ட மேற்பார்வை குழு. இவர்களை ஒருங்கிணைக்க பங்கஜ்குமார் நியமனம். தற்போது பீலா மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன். பாவம் கொரோனாவே கன்ஃப்யூஸ் ஆகப்போவுது!
இதுவே சமூகத் தளத்தில் பெரும் எதிர்வினைகளைக் கிளப்பிய நிலையில், இன்று அதே விவகாரத்துக்கு கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் ….
சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்! இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை @CMOTamilNadu தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்!
என்று கூறியிருக்கிறார். கொரோனாவைக் காரணம் காட்டி ஏற்கெனவே சுகாதாரத் துறையை கவனித்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கரை சரியான வகையில் பிரச்சனையை கையாளவில்லை என்ற காரணம் கூறி பதவி விலகச் சொல்லும் மு.க. ஸ்டாலின், இதே துறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அவரையும் இதேபோல் துறையை சரியாக கவனிக்கவில்லை என்ற காரணம் கூறி பதவி விலக வேண்டும் என்று சொல்வார் என சமூக தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ஆக… ஆக… ஆக… எடப்பாடி பதவி விலகணும் என்ற கோஷக் குரல் கொரோனாவால் வருங்காலத்தில் ஒலிக்கணுமோ!