மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆணைப்படி கோவிட் -19 மருத்துவ கிட் மாநகராட்சி பகுதியில் விற்பனை செய்வதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
ரெட் கிராஸ் தன்னார்வ தொண்டர்களை வைத்து கொண்டு விற்பனை செய்ய மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இந்த மருத்துவ கிட் விற்பனை செய்யப் பட்டு வருகின்றது.
மாநகராட்சிப் பகுதியில் வாகனத்தின் மூலம் விற்பனை செய்கிறார்கள். ரூ.250/-மதிப்புள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய மருத்துவ பெட்டகம் ரூ100/- மட்டுமே என்று தெரிவித்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை