கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

உரத்த சிந்தனை கல்வி தொழில்நுட்பம்
pannari

கொரோனா வைரஸ் காய்ச்சலைக் கண்டறியும் தானியங்கி கருவியை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்ததுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் தொடர்ந்து வைரஸ் நோய் தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில். மருத்துவர்கள் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வந்த நிலையில், இதனை தடுக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தினால் ஏற்படும் காய்ச்சலை கண்டறியும் தனியங்கி கருவியை வடிவமைத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அல்ட்ரா சோனிக் சென்சார்களை கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம். இந்த கருவி பொருத்தப்பட்டிருப்பதால் கொரோனாவால் ஏற்படும் காய்ச்சல் இருக்கும் நபர்களை இந்த கருவி கண்டுபிடிக்கும், மேலும் அவர்கள் உள்ளே நுழையவும் அனுமதிக்காது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்காணிக்கவும் இந்த கருவி உதவியாக இருக்கும். மேலும் மிக சிறந்த முறையில் மிக குறைவான நேரத்தில் அதிகப்படியான மக்களை பரிசோதனை செய்ய இயலும் எனவும் நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் இக்கருவி மிகவும் உதவியாக இருக்கும் எனவும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.