மனதின் குரல் – 26.07.2020: பொதுத் தேர்வில் சாதனை படைத்த நாமக்கல் ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் மோடி! முன்னதாக, கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் தேசத்துக்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகளில் பரப்புரை செய்யக் கூடாது என்றும் பல தரப்பட்ட விஷயங்களை மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
பொதுத் தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்த ஓட்டுநர் மகள்- மாணவி கனிகாவை பிரதமர் பாராட்டினார்.
இந்நிலையில், பிரதமர் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தம்முடன் கலந்துரையாடியதை நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகா மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். லாரி ஓட்டுநரான தமது தந்தை நன்கு படிக்க வைத்ததால்தான் CBSE +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமருடன் மாணவி கனிகா உரையாடியதன் தமிழ் வடிவம்..
வாருங்கள்! தென்னாடு செல்வோம். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கன்னிகாவோடு உரையாடுவோம், கன்னிகா கூறுவது உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
மோதி ஜி – கன்னிகா அவர்களே, வணக்கம்.
கன்னிகா – வணக்கம் சார்.
மோதி ஜி – எப்படி இருக்கிறீர்கள்?
கன்னிகா – நன்றாக இருக்கிறேன் சார்.
மோதி ஜி – முதன்மையாக நீங்கள் பெற்றிருக்கும் பெரும் வெற்றிக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
கன்னிகா – ரொம்ப நன்றி சார்.
மோதி ஜி – நாமக்கல் என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு ஆஞ்ஜநேயர் கோயில் தான் நினைவுக்கு வருகிறது.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – இனிமேல் எனக்கு உங்களோடு உரையாடியதும் நினைவுக்கு வரும்.
கன்னிகா – நன்றி சார்.
மோதி ஜி – மீண்டும் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.
மோதி ஜி – நீங்கள் தேர்வுகளுக்காக கடுமையாக உழைத்திருப்பீர்கள் இல்லையா? தேர்வுகளுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளும் அனுபவம் எப்படி இருந்தது?
கன்னிகா – நாங்கள் தொடக்கத்திலிருந்தே கடினமாக உழைத்து வருகிறோம் சார். நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை என்றாலும், முடிவு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
மோதி ஜி – உங்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?
கன்னிகா – 485 அல்லது 486 கிடைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
மோதி ஜி – ஆனால் இப்போது?
கன்னிகா – 490.
மோதி ஜி – சரி, உங்கள் குடும்பத்தார் ஆசிரியர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கிறது?
கன்னிகா – அவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம், பெருமிதம் சார்.
மோதி ஜி – உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடம் எது?
கன்னிகா – கணிதப்பாடம் சார்.
மோதி ஜி – ஓ, உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
கன்னிகா – நான் முடிந்தால் AFMCயில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன் சார்.
மோதி ஜி – உங்கள் குடும்பத்தாரும் மருத்துவத் துறையில் இருக்கிறார்களா?
கன்னிகா – இல்லை சார், என் தகப்பனார் ஒரு ஓட்டுநர், என் சகோதரி மருத்துவப் படிப்பு படித்து வருகிறாள்.
மோதி ஜி – அட பரவாயில்லையே! நான் முதற்கண் உங்கள் தகப்பனாருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உங்களையும் உங்கள் சகோதரியையும் நன்கு கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் செய்து வருவது பெரும் சேவை.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – அவர் அனைவருக்கும் கருத்தூக்கம் அளித்து வருகிறார்.
கன்னிகா – ஆமாம் சார்.
மோதி ஜி – உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும், உங்கள் தந்தையாருக்கும், உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கன்னிகா – மிக்க நன்றி சார்.