ஏப்ரல் 21, 2021, 10:39 காலை புதன்கிழமை
More

  கொரோனா: இறந்தவருக்கு உறுதியான தொற்று! இறுதிச் சடங்கில் பங்கேற்ற கிராமம்!

  corona camp paravai
  File pic

  வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் கிராமம் தர்மபுரி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓட்டுநர். உடல்நிலை பாதிக்கப்பட்டு கதிர்காமம்அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஜூலை 20-ம் தேதி இறந்தார். இறந்த பின் அவர் உடலுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

  பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாக அவரது உடலை உறவினர்கள் சிபாரிசு மூலம் பெற்று, அடக்கம் செய்துள்ளனர். இதற்கிடையே இறந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் உறுதியானது

  இதைத் தொடர்ந்து கந்தசாமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பரிசோதனை செய்ய, அதில் 5 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் கடும் அச்சத்துக்கு ஆளானார்கள்.

  இதையடுத்து கூடப்பாக்கம் அரசுப் பள்ளியில் அவர்களுக்காக நேற்று சுகாதாரத் துறையினர் சிறப்பு பரிசோதனை முகாமை நடத்தினர். இதில் 150க்கும் மேற்பட்டோரிடம் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. பரிசோதனை முடிவை எதிர்பார்த்து இக்கிராம மக்கள் காத்துள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »