ஐந்து வயது சிறுமியின் வயிற்றில்… அதிர்ந்த மருத்துவர்கள்!

Published:

Screenshot 2020 0801 105557 - 2026

சீனாவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பொம்மை காந்த மணிகளை விழுங்கிய நிலையில், அவரை இரண்டு மாதங்களுக்கு பின் எக்ஸ் ரே எடுத்து பார்த்து போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் கிழக்கு மாகாணமான Shandong-ல் இருக்கும் Jinan Children’s மருத்துவமனைக்கு பெற்றோர் சமீபத்தில் தன்னுடைய ஐந்து வயது மகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொம்மைகளுடன் விளையாடும்போது Buckyballs என்றும் அழைக்கப்படும் சுமார் 50 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக தாய் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஏனெனில், முன்பு இதைப் பற்றி அறிந்திருந்தாலும், அது இறுதியில் வெளியேறிவிடும் என்று நினைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த குழந்தை எந்த ஒரு அசாதாரணமாகவோ அல்லது வலியையோ உணரவில்லை. இந்நிலையில், குறித்த காந்த மணிகளை விழுங்குவதால், ஏற்படும் ஆபத்து குறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதைப் பார்த்த பின்பே இவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் சிறுமியை எக்ஸ் ரே ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுமியின் வயிற்றில் குறித்த பந்துகளின் ஒரு பெரிய மூட்டை போன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

சுமார் 190 காந்த குண்டுகள் இருந்துள்ளன. இதனால் இதை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே எடுக்க முடியும் என்று சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு எச்சரிக்கை தகவல் என்று இணையவாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img