
அயோத்தியா ஸ்ரீராமஜன்ம பூமி கட்டிட புதிய வரைபடம் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அயோத்தியில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஆலயத்தின் வடிவமைப்பாளர் சந்த்ரகாந்த் சோம்புரா (கட்டிடக்கலை நிபுணர்) வை இன்று சந்தித்தார்.

1989 ஆம் ஆண்டே புதிய ஸ்ரீராமர் கோவிலின் வடிவமைப்பை தயாரித்தவர் சந்திரகாந்த் சோம்புராதான். இவரின் திட்டப்படித்தான் சோம்நாத், அக்ஷர்தாம், அம்பாஜி ஆலயங்கள் உட்பட பல ஆலயங்கள் எழுப்பப்பட்டன.
1989ஆம் ஆண்டுக்குப் பின்னர், தற்போது 30 வருடங்கள் கழித்து ராமர் கோவில் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதால், தற்போது புதிய கட்டட வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளது