ஆர்.டி.ஐ., வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published:

supreme court of india - 2026

ஆர்.டி.ஐ., – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. தொடர்ந்து, தில்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு கடந்த 2010ல் தீர்ப்பு அளித்தது.

இதன்படி, ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் இடம்பெறும் என தீர்ப்பளிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ranjan gogoi - 2026

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வருடம் ஏப்.4 ஆம் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்நிலையில் இந்த வழக்கில் புதன்கிழமை இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கில் தமது தீர்ப்பினை அளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறியதுடன், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும், 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்.

  • RTI Act says all public authority comes under the ambit of RTI.
  • Public authority has been defined as one which is (run by or its functioning cost is borne by public money) substantially financed by public money.
  • Apparantly SC structure satisfies this definition of public authority.
ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

RTI in my humble opinion his lordships should have passed the judgement on Day 1 when he took office- Now its like saying I passed the order in the last day – Credit for Making CJI office transparent goes to present outgoing CJI but the burden of legacy pertaining to scrutiny and transparency is passed on to his immediate successor

Related articles

Recent articles

spot_img