அந்தக் குழந்தைகள் அனாதைகள் இல்லை!பொறுப்பு எனதே!: மீண்டும் கைகொடுத்த சோனுசூட்!

Published:

sonusood - 2026
  • அந்தக் குழந்தைகள் அனாதைகள் இல்லை… அவர்களின் பொறுப்பு என்னுடையது… சோனுசூட் மீண்டும் களத்தில் இறங்கினார்.
  • பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் மற்றுமொருமுறை தன் நல்ல மனசை வெளிப்படுத்தியுள்ளார்.
  • பெற்றோரின் மரணத்தால் அனாதைகளான மூன்று குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்துள்ளார்.

தெலங்காணா யாதாத்ரி புவனகிரி மாவட்டம் ஆத்மாகூர் மண்டலத்தைச் சேர்ந்த கட்டு சத்தய்யா, 18 மாதங்கள் முன்பு மரணமடைந்தார்.

அவருடைய மனைவி அனுராதா கூட உடல் நிலை சரியின்று நான்கு நாட்கள் முன்பு இறந்து போனதால் அவர்களின் மூன்று குழந்தைகள் மனோகர் (10) லாஸ்யா (7) யஷ்வந்த் (4) அனாதைகளானார்கள்.

இந்த விஷயத்தை கரணம் ரமேஷ் என்பவர் ட்விட்டரில் சோனுசூட் அக்கவுண்டுக்கு ட்வீட் செய்தார்.

அதற்கு உடனடியாக பதில் அளித்த சோனுசூட், அந்த மூன்று குழந்தைகள் அநாதைகள் இல்லை. அவர்களின் பொறுப்பு என்னுடையது என்று ட்விட் செய்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img