டிக் டாக்கில் பாடிக் கொண்டே கழுத்தறுத்துக் கொண்ட இளைஞர்! விபரீதங்களுக்கு முடிவில்லையா?!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் லைஃப் ஸ்டைல்

tiktak youth knife - 2026

டிக் டாக் விபரீதத்தால், பாடலுக்கு ஆக்சன் செய்து கொண்டே தன் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,

நவீன கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அதைப் போலவே பாடுவது, ஆக்சன் செய்து கொண்டு, தன் திறமையை உலகுக்குப் பறைசாற்றுவது என்று இயங்கி வரும் இளைஞர் பட்டாளத்தில் உச்சமாக ஓர் இளைஞர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு ஏற்ப வாய் அசைத்து ஆக்சன் செய்த போது, அவரது கழுத்தை கத்தி அறுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையும் அவர் பதிவு செய்துள்ளார். கத்தி அறுத்து ரத்தம் வந்ததும், வலி தெரிந்து உடனே போனில் ஆப்ஸ்பை அணைக்கிறார்.

இது போன்ற விபரீதங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைத் தளங்களில் கருத்துகள் பெருமளவில் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.