
சபரிமலை குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த ஜாக்டோ – ஜியோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப் பட்ட கேள்விகளால், ஆப்பசைத்த குரங்காக அதன் நிர்வாகிகள் ஆகிப் போயுள்ளனர்.
சபரிமலை விவகாரம், மதம் சம்பந்தப் பட்டது. அது கேரள மக்களுக்கும் அரசுக்கும் உச்ச நீதிமன்றத்தின் கெடுபிடிகளுக்குமான போராட்டம். அதில், ஆசிரியர்களும் தமிழக அரசு ஊழியர்களும் எங்கு வந்தார்கள்? ஏன் அத்தகைய ஒரு தீர்மானத்தைப் போட வேண்டும்? இந்தக் கேள்விகள் சாமானியனுக்கு எழும்.
ஆனால், சமூக வலைத்தள வாசிகள் வெச்சி கும்மு கும்மு என்று கும்மி எடுக்கிறார்கள் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை! அவற்றில் சில கருத்துகள்….
கன்னியாஸ்திரிகளை கற்பழித்த பிஷப்பை தண்டிக்க தீர்மானம் போட ஆரம்ப பள்ளி ஆசியர்கள் கூட்டமைப்பை கேட்போம்!
தன்வரம்பு மீறி எல்லை தாண்டும் ஜாக்டோ ஜியோ உண்மையான ஆசிரியர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் அவமானம்!
ஜேக்டோஜியோ சபரிமலையில பெண்களை அனுமதிக்கனும்னு தீர்மானம்! அப்ப ஊதிய உயர்வயும் அந்த பிணராய் கிட்டயே வாங்கிக்கோ!
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்ல ஜாக்டோ ஜியோ யார்?
புனிதமான ஆசிரியர் தொழிலையும் தன் கேடுகெட்ட நோக்கத்திற்கு பயன்படுத்தும் மத மாற்ற கும்பல்கள் பின்னணி தெளிவு. கொண்டையை மறைங்கடேய்.!
அனைத்து ஆரம்பப் பள்ளி முன்பும் ஐயப்ப பக்தர்கள் பஜனை செய்யவேண்டும்… இந்தத் தீர்மானத்தை கண்டித்து!
சபரிமலை பக்தர்களுக்கு எதிராகத் தீர்மானம் போட்டது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. இது குறித்து தங்கள் நிலைப்பாட்டை ஜாக்டோ ஜியோ விளக்க வேண்டும்.!
ஜாக்டோ ஜியோவும் சபரிமலையும்: தங்களுடைய கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ என்ற தொழிற்சங்க அமைப்பு போராட இருக்கிறது. ஆனால், அதில் தேவையில்லாமல் சபரிமலை விவகாரத்தை இழுத்து ஐயப்ப பக்தர்கள் நம்பிக்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
நாம் செய்ய வேண்டியது என்ன? முகநூலில் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிப்பதாலோ, வசை பாடுவதாலோ, கெட்ட வார்த்தையால் திட்டுவதாலோ எந்தப் பயனும் இல்லை.
நமது நண்பர்கள் உறவினர்கள் நமக்குத் தெரிந்தவர்களே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆக இருக்கலாம்்அவர்களுக்கு இதுபற்றிய புரிதல் இல்லாமலிருக்கலாம் அவர்களைத் தொடர்புகொண்டு ஜாக்டோ ஜியோ வின் சபரிமலை தீர்மானம் தவறு என்பதைச் சொல்லி நமது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலமாக ஜாக்டோ ஜியோ-விற்குத் தகவல் போனால் இந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பொதுவாக, அரசு நிதி உதவி பெறும் கிறிஸ்துவ சிறுபான்மை பள்ளிகள் தமிழகத்தில் வெகு அதிகம். அங்கே தான் கன்யாஸ்த்ரீகள் பாதுகாப்பற்ற முறையில் தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகிறார்கள். அவர்கள் தங்களைப் போன்ற கன்யாஸ்த்ரீகளை பாலியல் வன்கொடுமை செய்த கோரமான காமுகன் கேரள பிஷப் மற்றும் அவருக்கு துணை நிற்கும் சர்ச்களுக்கு எதிராகவும் கண்டித்தும் தீர்மானம் போட்டிருந்தால், அதன் உள்ளுணர்வை நாம் புரிந்து கொண்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் பலரும்!