சபரிமலை குறித்த தீர்மானம் அரசு ஊழியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது..!

Published:

jacto geo protest in chennai - 2026

சபரி மலை குறித்த தீர்மானம், அரசு ஊழியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்துவிட்டது என்று இப்போது பரவலாக கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த உத்தேசித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டதன் பின்னணியில் என்ன நடந்தது என்று ஒரு தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிரப் பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் வாட்ஸ் அப்பில் அனுப்பி வரும் தகவல் இது.

அரசு அலுவலர்களே, ஆசிரியர்களே, ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர், ஏதோ இவர்கள் தான் ஒட்டுமொத்த அமைப்பின் நிர்வாகிகள் என்பது போன்ற மாயையை உருவாக்கி வருகின்றனர். தங்களது இருப்பை காட்டிக் கொள்ளவும் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் திருப்திக்காகவும், அடிக்கடி காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்கின்றனர். இந்தச் செயல், அமைப்பைச் சேர்ந்த அனைவரின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்படுகிறது காலவரையற்ற போராட்டத்தை முன் மொழிபவர்களும், வலிமொழிபவர்களும் யார் என்பதைத் தற்போது அடையாளம் காட்ட விழைகிறோம்.

1) திரு.அ. மாயவன், மா.பொ.செயலாளர் த.நா .மே.நி.பள்ளி , உ நி.பள்ளி. முதுநிலை ஆசிரியர்கள் சங்கம்.
2. திரு.க.மீனாட்சி சுந்தரம், மா.பொ.செயலர்  தா.பள்ளி .ஆ.மன்றம்
3 திரு.செ.முத்துசாமி மா.பொ. செயலர் த .ஆ.கூட்டணி
4 திரு.மோசஸ் உ.நி.கு. உறுப்பினர் த.நா.ஆ.ப.ஆ. கூட்டணி
5. திரு.தாஸ் உ.நி.குழு உறுப்பினர் த. ஆ. பள்ளி கூட்டணி
6. திரு.சி.ஆறுமுகம் சிறப்பு தலைவர் த.நா.தமிழாசிரியர் கழகம்
7.திரு.க.அண்ணாமலை அ.இ.பொ.செயலர் ஐெபட்டோ
8 திரு.டி.சுப்பிரமணியம் சிறப்பு தலைவர் த.நா. ப. ஆசிரியர் கழகம்
9. அரசு ஊழியர் சங்கம் மார்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சி 10. அரசு ப.சங்கம் இந்திய கம்னிஸ்ட் கட்சி

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மேலே குறிப்பிட்டுள்ள ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர் அமைப்புகளும் தான் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தும் சில ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் ஓய்வுபெற்று 20 ஆண்டுகள் ஆகிறது.

இரு அரசு ஊழியர் சங்கங்களும் கம்யுனிஸ்ட் கட்சி பிடியில் உள்ளது. இவர்கள் தான் பணிபுரிந்து வரும் நம்மை காலவரையற்ற போராட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இது வரை நடந்த எந்த போராட்டத்திற்கான சம்பளம் மேற்கண்ட சங்கங்கள் பெற்றுத் தந்ததா? யோசியுங்கள்

தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட தற்போதைய சூழ்நிலையில் போராட்டம் வேண்டாம் தள்ளி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு கூட செவிசாய்க்காமல் போராட்டம் தான் முடிவு என செயல்படுவது நியாயமா?

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தானே இழப்பு ?.ஓய்வு பெற்ற தலைவர்களுக்கு என்ன இழப்பு? கம்யுனிஸ்ட் கட்சிகளின் அதிகார வெறிக்கு அரசு அலுவலர்களை பழி கொடுக்கலாமா? வீண் (வீம்பு ) போராட்டம் வெற்றி பெறாது நண்பர்களே. நமக்காக நாமே போராடுவோம். ஓய்வு பெற்றவர்களையும் கம்யுனிஸ்ட் கட்சியால் நியமிக்கப்படும் தலைவர்களையும் வெளியே அனுப்பி வைப்போம். கட்சி சார்பின்றி தலைமை செயலக சங்கம் உட்பட அனைவரும் இணைந்து நமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடுவோம்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்ற இவர்களின் தவறான தீர்மானம் ஒட்டுமொத்த மக்களிடம் நமக்கு பெரிய அவப்பெயரை உருவாக்கி விட்டது என்பதை உணரவேண்டும்!

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களை பழி கடாவாக்கும் அரசியல் பின்னனி சங்கங்கள் நடத்தும் போராட்டத்தை புறக்கணிப்போம்…. – என்று பகிரப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img