கத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கல்வி தமிழகம்
criam 1 - 2026

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இங்கு இயங்கி வரும் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்வாணன் என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை கல்லூரி வளாகத்திற்குள் வெளி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்வாணன் உட்பட அவரது நண்பர்கள் ஆறு பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.