
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட டிவி சீரியல் நடிகையான அனிகா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக அனிகா, அவருடைய கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோரை பெங்களூரு போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான அனிகா கன்னடாவில் டிவி நடிகை என்றும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீஸ் விசாரணையில் அனிகாவைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் என்றும் அவர் ஏற்காட்டில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்ததும் தெரியவந்துள்ளது. அனிகா, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு வேலை தேடி பெங்களூரு வந்து விடுதியில் தங்கி வேலை தேடியுள்ளார்.
வேலை கிடைக்காமல் இருந்த அனிகாவுக்கு சென்னையைச் சேர்ந்த ரவீந்திரன், கொச்சியை சேர்ந்த முகம்மது அனூப் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரவீந்திரனும் முகம்மது வும் ஏற்கனவே போதை மருந்துகளை விற்பனை செய்துவந்தவர்கள் என்பதால், அனிகா அவர்களுடன் சேர்ந்துகொண்டு போதை மருந்துகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, போதை மருந்துகளை விற்பனை செய்துவ