டிஎஸ்பி.,யாக பதவி உயர்வு பெற்று மதுரைக்கு வரும் காவல்துறை அதிகாரிகள்!

சற்றுமுன் தமிழகம் மதுரை
madurai police office
madurai police office

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வாளர்களாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களில் ஆறு பேர் மதுரைக்கும் பல்வேறு பொறுப்புகளில் பதவி உயர்வு பெற்று பணிப் பொறுப்பு ஏற்க உள்ளனர்.

சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத்குமார், போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாக மதுரையில் பொறுப்பேற்கிறார். நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அக்பர் கான், மதுரையில் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடியாக பணியாற்றிய ராஜன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி துணை கோட்ட டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். தென்காசி குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார்.

மதுரை மாவட்ட மத்திய குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் வேல்முருகன், அதே துறையில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெறுகிறார். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் ரகுபதி ராஜா, மதுரை மாவட்டம் மேலூர் துணை கோட்ட டிஎஸ்பியாக பதவி உயர்வு பெறுகிறார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.