ஏப்ரல் 22, 2021, 2:50 காலை வியாழக்கிழமை
More

  வங்கியில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்த இளைஞர்! கள்ள நோட்டால் அதிர்ந்த அதிகாரி!

  money 1
  money 1

  வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு இளைஞர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார்.

  அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து மேனேஜர் செல்வகுமார் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  இதனையடுத்து அந்த இரண்டு லட்சம் ரூபாய் நோட்டுகளை வங்கி மேனேஜர் மற்றும் ஊழியர்கள் சோதனை செய்தபோது 28 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

  இதனை தொடர்ந்து 14 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த மேனேஜர் உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார்.

  அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது.

  மேலும் இச்சம்பவம் குறித்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்த போது, தான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் இந்த பணத்தையும் வங்கி எண்ணையும் கொடுத்து டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

  இதனை அடுத்து கள்ள நோட்டு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிய அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவருக்கு இந்த பணத்தை கொடுத்து அனுப்பிய தனியார் நிறுவனத்தைப் பற்றியும், அவர்களுக்கு இந்த கள்ள நோட்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »