ஏப்ரல் 12, 2021, 5:57 மணி திங்கட்கிழமை
More

  கரூரில் மகளிர் தின விழா: வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

  சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சிகள்

  karur rally - 1

  கரூர் மாவட்ட பெண் ஆட்சியர் மலர்விழி தலைமையில் உலக மகளிர் தின விழா சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் வாக்கு செலுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு முயற்சிகள் – முழுக்க முழுக்க பெண்கள் கலந்துகொண்டு உற்சாகம் அளித்தனர்.

  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டும், வரக்கூடிய தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் அரசு பெண் அலுவலர்களால் வரையப்பட்டிருந்தது.

  மேலும், இதில் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரையப்பட்டிருந்த கோலங்கள் மற்றும் பெண்களைப் போற்றும் விதமாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டும் வண்ண வண்ண கோலங்கள் பெண் அரசு அலுவலர்கள் & அதிகாரிகள் வரைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அலங்காரப் படுத்தினர்.

  மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பார்வையிட்டதோடு, தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை முதலில் அவர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், மகளிரைப் போற்றும் விதமாகவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மலர்விழி அவர்கள் முற்றிலும் மகளிர்கள் மட்டுமே கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  முழுக்க முழுக்க பெண்களை கௌரவப் படுத்தவும், அதே நேரத்தில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செலுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது

  மேலும் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் வரும் 5 ஆண்டுகாலம் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் தங்களுடைய சொந்த மனசாட்சிப்படி விருப்பு வெறுப்பின்றி பொருள் குடிக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று நோக்கத்திற்காக உங்களுடைய வாக்கினை வீண் செய்ய வேண்டாம் சரியான முடிவெடுத்து ஓட்டு போட வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு செய்வதன் நோக்கம் என்று அப்பொழுது தெரிவித்தார்

  மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் அப்பொழுது தெரிவித்தார்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  nine + 14 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »