ஏப்ரல் 14, 2021, 1:55 காலை புதன்கிழமை
More

  கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

  கழகம் மற்றும் கரூர் டெக்ஸ்சிட்டி சார்பில் 5 ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியினை காண ஏராளமான பார்வையாளர்கள்

  karur basket ball tournament - 1

  கரூரில் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 95 : 83 என்கின்ற புள்ளி விகிதத்தில் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடம் சேலம் திரிவேணி அணி பெற்றது

  கரூரில் மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 4 தினங்களுக்கு முன்னர் இரவு துவங்கியது.

  கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கழக கரூர் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் துவங்கிய இந்த போட்டியினை, கரூர் நகர அதிமுக செயலாளர் வை.நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.

  இந்த போட்டியானது இரவு பகலாக 4 தினங்களாக நடைபெற்ற நிலையில் இன்று அதன் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியானது, முற்றிலும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், சென்னை., சேலம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.

  இதன் இறுதி சுற்றில் 95 : 83 தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணி முதலிடமும், இரண்டாவது இடம், சேலம் திரிவேணி பாஸ்கட் பால் அணியும் வென்றது. மூன்றாவது இடத்தினை 51 : 49 என்கின்ற புள்ளி விகிதத்தில் சென்னை வேளச்சேரி பாஸ்கட் பால் கிளப் அணியும், நான்காவது இடத்தினை திண்டுக்கல் ஜி.டி.என் பாஸ்கட் பால் கிளப் அணியும் பிடித்தது.

  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி அரைஸ் சுழற்கோப்பைகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். இந்த போட்டியில், கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கூடைப்பந்தாட்ட கழக துணை தலைவர்கள் வீர திருப்பதி, குழந்தைவேல் மற்றும் சமூக நல ஆர்வலர் டி.சி.மதன் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பாக செய்திருந்தனர்.

  மேலும், இந்நிகழ்ச்சியில். ஜாஸ்மின் பல்மருத்துவமனை மருத்துவர் சிவசங்கர், Sterline fabrics கிறிஸ்டோபர், கரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் கரூர் டெக்ஸ்சிட்டி சார்பில் 5 ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியினை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  4 − 2 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »