ஏப்ரல் 20, 2021, 8:49 காலை செவ்வாய்க்கிழமை
More

  ரெய்டு: செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்கள் வீட்டில் சிக்கிய பணம்!

  senthil balaji
  senthil balaji

  கரூர் மாவட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவரது ஆதரவாளர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனை.

  கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதராவளர்களின் வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

  அப்போது கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகே உள்ள டெக்ஸ் யார்டு இன்டர்நேஷனல் எனும் நிறுவனம், முருகன் அண்ட் கோ டைல்ஸ் நிறுவனம் 80 அடி சாலையில் இயங்கிவரும் வரும் குளோபல் பைனான்ஸ் அண்ட் பேக்ஸ் என மூன்றுக்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவனங்கள், ராம்நகர் யுனைட்டட் எக்ஸ்போர்ட், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

  இதில் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 7 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  சோதனை நடைபெறும் இடங்கள் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு உரிமையானது என்றும் கூறப்படுகிறது. அதே போல கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் இரவில் தொடரும் இந்த வருமான வரி சோதனையால் அரசியல் வட்டரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »