ஏப்ரல் 20, 2021, 10:03 காலை செவ்வாய்க்கிழமை
More

  மும்பை தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு! 5 லட்சம் இழப்பீடு!

  Mumbai fire - 1

  மும்பையில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கோரியுள்ளார்.

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பந்தப் பகுதியில் அமைந்துள்ள ட்ரீம்ஸ் மாலில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு மாடி கட்டடமான அந்த மாலில், மளமளவென பரவிய தீயானது, மூன்றாவது தளத்தில் இருந்த கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைவிக்கும் பரவியுள்ளது.

  இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதால் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்தது.

  துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் வெகு நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், அந்த மருத்துவமனையில் சுமார் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 70 பேர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

  Mumbai 1 1 - 2

  தீ விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், படுகாயம் அடைந்தவர்கள் உடல்நலம் தேறிவர தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

  மேலும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததோடு மேலும் சம்பவம் தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

  முன்னதாக மும்பை மேயர் சம்பவம் குறித்து பேசியதாவது, மால் உள்ளே மருத்துவமனை கட்டப்பட்டதை தாம் முதல் முறையாக அறிந்திருப்பதாக தெரிவித்த அவர், தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »