November 28, 2021, 5:35 am
More

  அறிந்தவரும் அறியாதவரும்.. அவசரத்தின் பிழையும்!

  krishnar 3
  krishnar 3

  நண்பா….நான் இன்று இரவு என் மனைவி சகுந்தலையுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்” தூரப் பயணம் மேற்கொண்ட காரணத்தால் அருகில் உள்ள உங்கள் வீட்டில் இன்றிரவு தங்கி விட்டுப் போகின்றேன், என்று தன் நண்பர் சோனுவுக்கு தொலைபேசியில் தகவல் தந்தார் பாஸ்கரன்

  அதற்கு அந்த நண்பர் சோனு “மகிழ்ச்சி வாருங்கள்…ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் நீங்கள் வரும் போது கடையில் இருக்கின்ற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான ‘கேக்’கு ஒன்று வாங்கி வாருங்கள்” என்றார்.

  “எதற்காக?” என்று பாஸ்கரன் கேட்க, என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான்
  ‘சர்பிரைசாக’ அவனை மகிழ்ச்சியில்
  ஆழ்த்தும் விதமாக கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்” என்றார்.

  அவர் கூறியவாறு பாஸ்கரன் கொஞ்சம் அதிகமா செலவழித்து நல்ல ‘கேக்’ cake ஒன்றை வாங்கிச்சென்றார் .

  அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் இவரும் அடுத்தநாள் ஊருக்கு கிளம்பத் தயாரானார்.’கேக்’கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் சோனு அதற்கு உண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார் பாஸ்கரன்.

  ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து “கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள். மீதமுள்ள இனிப்பு பண்டங்களை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்” என்று ஒரு பெட்டியை கொடுத்தார்.

  எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பும் வழியில் மனைவி சகுந்தலையிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார் பாஸ்கரன்

  விடுங்கள் அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்” என்றார் மனைவி சகுந்தலை. இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

  வீட்டிற்கு வந்து அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இனிப்புகளுடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தன.

  அந்தக் கடிதத்தில் “நண்பா என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக ‘கேக்’
  வாங்கி வந்தமைக்கு நன்றி எனவும்
  தொகை எவ்வளவு என்று கேட்டு அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை.

  கொடுத்தாலும் நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எனவே இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன் தயவு செய்து இதை எடுத்துக் கொள்” என்று இருந்தது.

  அதைப் படித்தவுடன் அவரை நண்பன் சோனு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது… அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம், ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக கருதுகிறான் என்று வேதனையடைந்தார்.

  மனம் வேதனைப்பட்ட அவர், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு “உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு” என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவி சகுந்தலையிடம் சொன்னார்.

  அவ்வாறெல்லாம் பேசி மேலும் இன்னொரு தவறு செய்யாதீர்கள். உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, “அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்” என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார். உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்துவிடும், என்றார் மனைவி சகுந்தலை.

  பெரும்பாலும் நாம் அவசரப்பட்டு மற்றவர்களின் வெளிபுறமான நடவடிக்கையை வைத்து அவரைப் பற்றித் தவறாக எண்ணுகிறோம்.

  ஒருவரின் அந்தரங்க எண்ணத்தை ஸ்ரீ கிருஷ்ணன் மட்டுமே அறிவான். நம்
  ஒவ்வொருவரின் மதிப்பும் உயர மதிப்பு வாயிந்த பகவான் ஸ்ரீமந் நாராயணன் திருவடி பற்றி மேன்மை அடைவோம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,745FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-