December 6, 2025, 4:02 AM
24.9 C
Chennai

அக்னி-5; சீனாவை அலறவைக்கும்… இந்தியாவின் ‘பஞ்ச்’சீலக் கொள்கை!

agni missile oct 27th launched
agni missile oct 27th launched

அக்டோபர் 27ம் தேதி இரவு 7:50 மணியளவில் மழைக்கால மேகங்களுக்கு நடுவே நம் தேசத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை விண்ணில் சீறி பாய்ந்ததோடு இல்லாமல் வெற்றிகரமாக வெகு துல்லியமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தது.

இது வரை இந்தியாவின் பெருமைக்குரிய DRDO நிறுவனம் ஏழு முறை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். ஆனால் நேற்று இந்த அக்னி 5 யின் சோதனையை மேற்கொண்டவர்கள் இந்தியாவின் SFC அதாவது strategic force command என்பவர்கள் ஆவர். இவர்கள் தாம் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் அனைத்தையும் தர நிர்ணயம் செய்வது முதல் எதனை.. எங்கு.. எப்போது.. எப்படி… எந்த சூழ்நிலையில் பயன் படுத்த போகிறோம் என்பதை தங்களிடம் உள்ள தரவுகளின் மூலமாக அறிந்து… அறிவுறுத்த கூடியவர்கள்.

மேலும் கூடுதல் தகவலாக கடந்த ஏழுமுறையும் பகல் பொழுதில் சோதனைகளை மேற்கொண்டவர்கள் நேற்று இரவு பொழுதை தேர்ந்தேடுத்து சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள் இவர்கள்.

இத்தனை காலமும் சோதனை செய்த அக்னி ஏவுகணைகளை போல் இல்லாமல் இதில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவான கார்பன் ரீ-இன்போர்ஸ்மேன்ட் செய்யப்பட்ட உடல் அமைப்பை கொண்டதாக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் எரிபொருள் மிச்சம் கூடுதல் சக்தி… கூடுதல் செயல்திறன் என அசத்தி இருக்கிறார்கள் நம் DRDO விஞ்ஞானிகள். அது போக தற்போது நாம் பயன்படுத்தும் அதி நவீன கம்ப்யூட்டர் சிப்களை காட்டிலும் ஏழு மடங்கு செயல் திறன் மிக்க புதிய சிப்களை பொருத்தி அதனையும் சேர்த்தே சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

விண்ணில் ஏவிய இதனை எந்த ஒரு தொழில்நுட்ப பண்புகளாலும் இடைமறிக்க முடியாது….. எதனாலும் செயலிழக்க செய்ய முடியாது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சங்கள். தவிர இந்த ஏவுகணை 24 மாக் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. இங்கு மாக் என்பது ஒலியின் வேகம். சரியாக சொன்னால் ஒலியை காட்டிலும் 24 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

இதனோடு கூட MIRV எனும் பண்புகளையும் கொண்டுள்ளது இந்த அக்னி 5 ஏவுகணை. சரி அது என்ன MIRV.???
Multiple Independent Re entry Vehicle என்பதின் விரிவாக்க சுருக்கம் தான் இந்த mirv. இது போக மல்டிபிள் வார் எட் கொண்டது .

அதாவது ஒரே ஏவுகணையில் நான்கு முதல் ஆறு இலக்குகளை குறி வைத்து நான்கு முதல் ஆறு தனித்தனியான ஏவுகணைகளை செலுத்தக்கூடிய திறன் இதற்கு உண்டு.

அதாகப்பட்டது நம்ம ஊர் ஷேர் ஆட்டோ போல என்று வைத்துக் கொள்ளுங்கள். போகிற வழியில் எதிர்ப்படும் இலக்குகள் அத்தனைக்கும் குறி தவறாமல் தன்னுடன் கொண்டு செல்லும் ஏவுகணைகளை செலுத்தி விடும். பாலிஸ்டிக் ரகத்திலான இந்த ஏவுகணை தான் இன்றைய தேதியில் அதி உச்ச செயல்திறன் கொண்ட ஏவுகணை தொழில்நுட்பம் என்கிறார்கள்.

கானிஸ்டர் வகையை சார்ந்த இது …. அதாவது கானிஸ்டர் என்பதற்கு நீண்ட குழாய் வடிவில் உள்ளவற்றை குறிக்கும் சொல்… வெகு சுலபமாக இடம் மாற்றம் செய்ய முடியும். எப்போதும் அணு ஆயுதங்களோடு தயார் நிலையில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க முடியும். 90 விநாடிகளில் இலக்கை நோக்கி செலுத்த முடியும் என்கிற ரீதியில் பல முடியும் இதில் அடக்கம்.

இந்தியாவின் பாதுகாப்பே தனது தலையாய பணி என இரவு பகல் பாராது அயராது உழைத்த அந்த உத்தமன் இன்று நம்மோடு இருந்திருந்தால் வெகு நிச்சயமாக சந்தோஷப்பட்டு இருப்பார். ஏனெனில் இந்தியா 2020 ஆம் ஆண்டுகளில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயரும் என அழுத்தி சொன்ன… ஆணித்தரமாக நம்பிய மாமேதை அவர். அதற்காகவே அல்லும் பகலும் பாடுபட்டார் அவர்.

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி என சொல்லும் இந் நந்நாளில் வெகு நிச்சயமாக நாம் மனதார நினைவு கூறுவது அந்த மாமேதை நாம் செய்யும் சிறு நன்றிக் கடன்.

தற்போது சோதனை செய்து பார்த்தது வெறும் வெள்ளோட்டம் மாத்திரமே என்கிறார்கள் நம் இந்திய விஞ்ஞானிகள்.

இது தரையில் இருந்து தரையை தாக்கும் ரகத்தினை மட்டுமே தற்போதைக்கு சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். இதனை விண்ணில் வைத்து அதாவது வானில் இருந்து விமானம் மூலம் இயக்கி பார்க்க பின்னர் நாள் குறிக்கப்படும் என்கிறார்கள். அதுபோலவே கடலடியில் இருந்து நீர் மூழ்கி கப்பலில் இருந்து சோதனை செய்து பார்க்க இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மைய பகுதியில் அக்னி 6 சோதனை செய்து பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி அதிரடித்திருப்பது தனிக் கதை.

பாரதம் மிக வலுவான ராணுவ பலத்துடன் சக்தி வாய்ந்த ஆற்றலோடு தற்போது விளங்குகிறது………

அதனை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் அயராது உழைத்து வருகின்றனர் நம் இந்திய விஞ்ஞானிகள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை.

இது எதுவுமே சரியாக புரிந்து கொள்ளாத கூகைகள் நம் தேசம் முழுவதிலும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பது அவர்களின் சமூக வலைதளங்களில் எழுதும் விதத்தை பார்த்தாலேயே புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது இவர்களை எல்லாம்….. நம் பக்கத்தில் தான் சீப்பு செந்தில் முதற் கொண்டு லூசு அருணன் வரை இருக்கிறார்கள் என்று பார்த்தால் இவர்கள் அவர்களையும் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது….. இருந்து விட்டு
போகட்டும்.

ஆனால் ஒன்று மாத்திரமே ஆறுதலான விஷயம். ஒரு காலத்தில் நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட பிரிட்டனை நம் ஏவுகணை கொண்டு மிரட்டி பார்க்கும் அழகிய தருணங்களில் இதுவும் ஒன்றுன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories