
பற்று சரியாக…
துளசி இவையுடன் எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து பற்றுக்கள் மீது தடவி வர குணமாகி விடும்.
பவுத்திரம் குணமாக…
மூலநோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பவுத்திரமாக மாறி விடும். வெண் கொடி வேலியின் வேர், பூரம், ஓமம் சம எடை எடுத்து. மூன்றின் எடைக்கு சமமான பனை வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து நிழவில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலையில் மட்டும் ஒரு மாத்திரை சாப்பிட்டு வர பவுத்திர நோய் குணமாகும்.
சொறி சிரங்கு குணாமாக…
வேப்பிலையை பொடியாக நறுக்கி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இட்டு தூள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெயை விட்டு வெயிலில் வைக்க எண்ணெய் சிவப்பாக மாறும். இந்த எண்ணெயை சொறி சிரங்கின் மீது தடவி வர மூன்று நாள்களில் குணமாகும்.
தேமல் சரியாக…
பப்பாளி இலை சாற்றை தடவி வர தேமல் சரியாகும்.
தலைக்கரப்பானுக்கு…
முடியை வெட்டி மொட்டையடித்து இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி தலையில் வைத்துக் கட்டி விட்டு காலையில் அவிழ்த்து அரப்புத் தேய்த்துக் குளிக்க சில நாள்களில் குணம் தெரியும்.