
கேரள ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பேசியதாவது,
ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், துணை வேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும்.
சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செயல்படுகிறார். கேரள பல்கலைக் கழகங்களின் கல்வி தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக?. இதன் பின்பு உள்ள அரசியல் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.அதனைத் தொடர்ந்து கேரளத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கேரளத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சுட்டுரையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் பதவி விலக மறுத்த 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பதவி விலக மறுப்பது குறித்து நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் கான் நேற்று கூறியிருந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழக துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து கேரளத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கேரளத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சுட்டுரையில் உத்தரவிட்டிருந்தார்.
ராஜிநாமா செய்ய வேண்டிய பல்கலைக் கழக துணை வேந்தர்களின் பட்டியலையும் இணைந்திருந்தார்.