மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் 11பேர் பலி.. பிரதமர் இரங்கல்..

Published:

மத்தியப்பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் காவல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை எஸ்.யு.வி. கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் கூறியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் பெதுலில் காரும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி

இந்நிலையில், பெதுலில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகையும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

மத்தியப்பிரதேசம் மாநிலம், பெதுலில் நடந்த கோர விபத்தில் 11 பேர் இறந்த தகவல் அறிந்து வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடுபத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
959343 chennai 09 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img