

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளை ஏ.டி.எம் மையத்தில் எ.டி.எம் மிசினை உடைத்து கொள்ளை முயற்சி;மிஷினை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராயந்து போலீசார் விசாரணை
அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் ஸ்டேட் பேங்க் கிளை செயல்பட்டு வருகிறது அதன் அருகியிலேயே அதன் ஏடிஎம் இயங்கி வருகிறது இந்நிலையில் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் விளக்குகளை அணைத்துவிட்டு இரும்பு கம்பியால் ஏடிஎம் மிஷினை உடைக்க முயன்றுள்ளார் ஆனால் ஏடிஎம் உள்ளே உள்ள பெட்டியை உடைக்க முடியாததால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார் இதனால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியது
இதை சென்னையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு மையத்தில் இருந்து சிசிடிவி கேமரா மூலம் பார்த்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர் மேலும் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர் ஏடிஎம் மையத்தில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.