
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், அதிமுக.,வின் எடப்பாடி தரப்பு தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுக.,வின் தேர்தல் அரசியல் போக்கை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக.வும் அங்கம் வகிக்கும் நிலையில், அதிமுக., தலைமையிலான கூட்டணி என்ற பெயரில் ஒரு முற்போக்கும் அதில் ஒட்டிக் கொண்டுள்ளதை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
முன்னதாக, தேர்தல் பணிமனையை திறந்து வைத்து ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்.