December 7, 2025, 3:20 PM
27.9 C
Chennai

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

IMG 20240413 WA0030 - 2025
#image_title

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் திரு TTV தினகரன் அவர்களுக்கு, குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். செல்லுமிடமெங்கும், பொதுமக்கள் அளித்த எழுச்சி மிகுந்த வரவேற்பு, அண்ணன் அவர்களின் வெற்றி உறுதி என்பதை எடுத்துக் காட்டியது. அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள், ஏற்கனவே தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள், மீண்டும் அண்ணன் அவர்களையே பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.

நாடு முழுவதும், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்குத் துணையாக, தமிழகத்தின் தேனி தொகுதியிலிருந்தும், அண்ணன் திரு TTV தினகரன் அவர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.

தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் திரு.ஸ்டாலின், இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கவிருக்கும் தேர்தல். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், 35 மாதங்களாக வெறும் விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை, தமிழக அரசியலை விட்டு அப்புறப்படுத்தவிருக்கும் தேர்தல்.

அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள் வெற்றி பெற்றால், திரு. எடப்பாடி அவர்கள் தலைமையிலான அதிமுக காணாமல் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிமுக திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் அண்ணனுக்கு எதிராக கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணன் திரு TTV தினகரன் அவர்கள் பக்கம்தான் என்பதை, ஜூன் 4 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி போல விளம்பரம் தேவையில்லாத ஆட்சி. மோடி வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ. 174 ஆக இருந்த ஊதியத்தை, ரூ. 324 ஆக உயர்த்தி, மக்களுக்கு ரூ.60,000 கோடி நிதி, விவசாயிகளுக்கு வருடம் ரூ. 6,000 என இதுவரை ரூ.30,000, பல ஆயிரம் கோடி முத்ரா கடனுதவி என சாமானிய மக்கள், விவசாயிகள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவருக்குமான நல்லாட்சி நமது பாரதப் பிரதமர் அவர்களது ஆட்சி.

ஆனால், 2004 – 2014 திமுக காங்கிரஸ் பத்தாண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு துரோகத்தைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் உயரத்தைக் குறைத்த துரோகம், கேரளாவில் இன்னொரு அணையைக் கட்ட அனுமதித்து செய்த துரோகம் என திமுக காங்கிரஸ் ஆட்சி செய்தவை பல. 2G ஊழல் வழக்கால் காங்கிரஸ் மிரட்டலுக்கு திமுக அமைதியாக இருந்து துரோகத்துக்குத் துணை போனது. அதுமட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காங்கிரஸ் தடை செய்தது. நமது பிரதமர் மோடி அவர்கள்தான் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுவதை உறுதி செய்தார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு, மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்று கூறியது. திமுக ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, 35,000 ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்கப் பணம் கொடுக்க திமுக வந்தால், கஞ்சா விற்ற பணம் வேண்டாம் என்று மக்கள் கூற வேண்டும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது நாட்டை வளமாக்க, வலுப்படுத்த, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்போது, அவற்றில், தேனியின் குரலும் ஒலிக்க, தேனி தொகுதி வளர்ச்சி பெற, அண்ணன் திரு TTV தினகரன் அவர்களை, குக்கர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories