பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டு ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி. பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டையில் விசைத்தறி இயக்கி வாக்கு சேகரிப்பு.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த காரில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதன்படி அருப்புக்கோட்டை நகர் பகுதியில் காந்தி மைதானம், திருநகரம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விவிஆர் காலனி, கலைஞர் நகர், நெசவாளர் காலனி, ராமலிங்க நகர், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராதிகா சரத்குமாருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராதிகா சரத்குமார்,
நான் கடந்த மூன்று வாரங்களாக பல குக் கிராமங்களுக்கு கூட சென்று வருகிறேன். என்னுடைய ஒரே கேள்வி 10 ஆண்டுகளாக இங்கு ஒரு எம்பி இருந்தார். அவர் இந்தத் தொகுதிக்கு ஏன் எதுவும் செய்யவில்லை. திருநகரம் பகுதியில் பிரச்சாரம் செய்த போது திடீரென காரில் இருந்து இறங்கி நெசவாளர் வீட்டுக்குள் சென்றார்.அங்கு விசைத்தறி நெசவாளர் இடம் குறைகளை கேட்டு அவர்களுடன் விசைத்தெரிய இயக்கி வாக்கு சேகரித்தார்.
அருப்புக்கோட்டையில் அதிக நெசவாளர் வாழும் பகுதி .தறியும், திரியும் தான் பிரதான தொழில் அந்தத் தொழிலை பாதுகாக்க முன்னாள் எம்பி எதுவும் செய்யவில்லை.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரம் உலகில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கண்டிப்பாக மூன்றாவது முறை ஆட்சி அமைப்பார். இங்கு நான் வெற்றி பெற்றால் இங்கு ஜவுளி பூங்காவை விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.
மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நீங்கள் தாமரைச்சினத்திற்கு வாக்களிக்க வேண்டும். மற்ற கட்சிகளில் அண்ணா திமுக, மற்றும் திமுக கட்சிகள் இடையே பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட கூற முடியாது. மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக நல்ல பிரதிநிதியாக நான் இருப்பேன்.
அப்போது தங்கம் விலை கூடிக்கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அது உலகச் சந்தையில் உள்ளது. விலை நிர்ணயம் நம் கையில் இல்லை.
மேலும் அப்போது அங்கிருந்த ஒரு மூதாட்டி முதலில் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என குரல் எழுப்பினர்.
உங்கள் மருத்துவருக்கு மருத்துவம் தெரியுமா, மருத்துவம் படிக்க தகுதி உள்ளதா என்பதற்காக வைக்கப்படும் தேர்வு, மருத்துவம் என்பது உயிரை காப்பாற்றக் கூடிய ஒரு தொழில் ஆனால் நீட் என்பது எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். எத்தனை பேர் காசு கொடுத்து டாக்டராகிறார்கள் என தெரியுமா அதை தடுப்பதற்கு தான் நீட் தேர்வு என பேசினார்.
பிஜேபி வேட்பாளர் ராதிகா தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல் ,மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி ராஜலட்சுமி மற்றும் பிஜேபி நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.