IPL 2024: கடைசி பந்தில் சிக்ஸ்; த்ரில் வெற்றி!

Published:

ipl 2024 - 2026

இருபத்திமூன்றாம் நாள்

ஐபிஎல் 2024 – 13.04.2024 – முல்லன்பூர்

பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் அணியை (147/8, அஷுதோஷ் ஷர்மா 31, ஜித்தேஷ் ஷர்மா 29, லிவிங்க்ஸ்டோன் 21, ஆவேஷ் கான் 2/34, கேஷவ மஹராஜ் 2/23) ராஜஸ்தான் அணி (152/7, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 39, ஹெட்மேயர் 27, தனுஷ் கோடியான் 24, ரியன் பராக் 23, ரபாடா 2/25) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் இன்று ஷிகர் தவான் உடல்நலக் குறைவு காரணமாக விளையாடவில்லை. சாம் கரண் அணியின் தலைவராகச் செயல்பட்டார்.

தொடக்க வீரராக தவானுக்குப் பதிலாக அதர்வா தைய்தே இறங்கினார். தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறினர். அதர்வா தைய்தே (15 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (15 ரன்), பிரப்சிம்ரன் சிங் (10 ரன்), சாம் கரன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (9 ரன்) எனப் பலர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

ஜித்தேஷ் ஷர்மா (29 ரன்), லிவிங்க்ஸ்டோன் (21 ரன்), அஷுதோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சற்று நிதானித்து ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது.

148 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் தனுஷ் கோடியான் (24 ரன்) 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் 12ஆவது ஓவர் வரை ஆடினார். 28 பந்துகளில் 39 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

அதன் பிறகு ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடமுயன்று சம இடைவெளியில் விக்கட்டுகளை இழந்து வந்தனர். சஞ்சு சாம்சன் (18 ரன்), ரியன் பராக் (23 ரன்), துருவ் ஜுரல் (6 ரன்), போவல் (11 ரன்), கேசவ் மஹராஜ் (1 ரன்) என அந்த அணியின் பேட்டர்கள் இன்று சோபிக்கவில்லை.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

கடைசியில் ஷிம்ரன் ஹெட்மேயர் 10 பந்துகளில் 27 ரன் அடித்து வெற்றியைத் தேடித்தந்தார். அதுவும் அவருடைய கடைசிப் பந்து சிக்சர் அனைவரின் இதயத்துடிப்பை ஒரு விநாடி நிறுத்தியது எனச் சொல்லலாம். எளிதாக வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை கடைசி பந்துவரை இழுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஷிம்ரன் ஹெட்மேயர் தன்னுடைய சிறப்பான ஃபினிஷிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.     

13.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை5234-0.073
பஞ்சாப்6234-0.218
டெல்லி6244-0.975
பெங்களூரு6152-1.124
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img