spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

yogi adityanath
#image_title

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

— தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

கேள்வி– ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார் என்பது குற்றச்சாட்டு.   நீங்கள் லவ் ஜிஹாத் பிரச்சனையை எழுப்பியிருக்கிறீர்கள்.

பதில்– பாருங்க லவ்ஜிஹாத், இந்த தேசத்துக்கு எதிரான, இந்த தேசத்தின் கலாச்சாரத்துக்கு எதிரான, ஒரு, சர்வதேச சூழ்ச்சி.   இந்த சூழ்ச்சி, குறித்து நான் பேசலை.   உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் 2006இலே, உத்திர பிரதேச அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை அளிச்சுது.  

உத்திர பிரதேச மாநிலத்திலே, இந்துப் பெண்கள் ஏன் இத்தனை வேகமாக கடத்தப்படுகிறாங்கனு என்று கேட்டிச்சு?   ஆனால் இது உத்திர பிரதேசத்தோடு நின்னு போயிடலை.  

2009இலே, கேரள உயர்நீதிமன்றமும் இது தொடர்பா, அங்கிருக்குற அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை கொடுத்திச்சு அதாவது, நான்கு ஆண்டுகளிலே 5000த்திற்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் கடத்தப்படுவது, மர்மமா இருக்கே இது என்ன?  

கர்நாடக உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக அறிவுறுத்திச்சு, இது ஏன் சிஐடி புலனாய்வு செய்யப்படலை?   திடீர்னு ஏன் இந்துப் பெண்கள் காணாம ….. போறாங்க கடத்தப்படறாங்க அவங்களுக்கு என்ன ஆகுது?   இது வெறுமனே….. இரண்டு நபர்களுக்கு இடையேயான பரஸ்பர காதல்னா, பிரச்சனையே இல்லை, காதலிக்கட்டும். 

பரஸ்பர சம்மதத்தோட செஞ்சுக்கட்டும்.  ஆனா வஞ்சனை சூது காரணமா கூடாது, ஏமாற்றுனால இல்லை.   ராஞ்சியில நடந்ததாகட்டும், மீரட்டுல நடந்ததாகட்டும், ஹரியாணாவுல நடந்ததாகட்டும்.  

இந்த மாதிரியான கெட்ட நடவடிக்கையை, ஜிஹாத்ங்கற பெயரால இந்தியா மேல திணிக்கற முயற்சிகள் நடக்குது, அதை நாம எந்த வகையிலயும்….. ஏத்துக்கவே முடியாது.   

கேள்வி – யோகிஜி, ஒரு இந்துப் பெண் முஸ்லிம் பையனைக் காதலிச்சா லவ் ஜிஹாத்.  ஆனா ஒரு முஸ்லிம் பெண் இந்துப் பையனை காதலிச்சா வாழ்கவாழ்கவா?   இது ரெட்டை நிலைப்பாடு இல்லையா?  

பதில் – இந்துப் பையனோடு முஸ்லிம் பெண் போனா தன்னோட சமூகப் பாதுகாப்புக்காகப் போகுறா.   அதாவது எதற்கு போகுறான்னீங்கன்னா ஒரு, ஹிந்துப் பையன் ஒரு முஸ்லிம் பெண்ணை மணக்கும் போது அவன் ஒருவனுக்கு ஒருத்திங்கற வாக்கைக் கடைப்பிடிக்கிறான்.  அவளுக்கு சமூக பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அவன் அளிக்கிறான்.  

இஸ்லாம் இதுமாதிரியான உத்திரவாதத்தை அளிக்குதா?   அளிக்காது.   அங்கே, அவகிட்ட, அங்க…. நடக்கறதுக்குப் பின்னால ஒரு பெரிய சர்வதேச சூழ்ச்சி கும்பலே இருக்குங்க…. லவ்ஜிஹாத் பெயர்ல.   இதுக்கு பேக்கேஜ் அறிவிக்கப்பட்டிருக்கு.  

இந்துப் பெண்கள் கடத்தப்படணும், அவங்ககிட்ட, வலுக்கட்டாயமா, தவறா நடக்கறது, அவங்க வாழ்க்கையை நாசப்படுத்தறது, அதுக்குன்னு பல்வேறு பேக்கேஜ்கள் வெளியாயிருக்கு.  

எல்லாம் ஏமாத்து வேலை…. ஏன் முதல்லயே உண்மையான பெயரை சொல்றதில்லை?  உங்க சரியான பேரைச் சொல்லுங்க, ஏன் குட்டு பப்புன்னு எல்லாம்….. போலி பெயர்களால சமூகத்தை முட்டாளாக்கப் பார்க்கறீங்க?  சரியான பெயரால வெளிப்படுத்திக்குங்க.  

நமக்கு காதல் மேல ஆட்சேபணை இல்லை, ஆட்சேபணை என்னென்னா லவ்ஜிஹாத், தேசத்துக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சி.  இதை நான் மட்டும் சொல்லலை, 2010ஆம் ஆண்டுல கேரளத்தோட கம்யூனிஸ்ட் முதலமைச்சர், கே எஸ் அச்சுதானந்தனும் கூட இதைச் சொல்லியிருக்காரு, அதாவது கேரளத்தில லவ் ஜிஹாத், கேரளத்தை ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக்கற சதியோட ஒரு பகுதின்னு சொல்லியிருக்காரு.  

ஒரு கம்யூனிஸ்ட் முதலமைச்சர் இந்த விஷயத்தைச் சொல்றாரு.   அப்ப நீங்க தவறா எடுத்துக்கறதில்லை.  ஆனா நான் சொல்லும் போது, உங்களுக்குத் தவறா படுது.   என்ன படுதுன்னா, கண்டிப்பா இது அலசி ஆய்வு செய்யப்பட வேண்டியது.  

கேள்வி – ஏன் தவறா படுதுன்னா, காதலிக்கறவங்க மதம் ஒரு தடையா இருக்க முடியாதுன்னு கருதறாங்க.   வயதுக்கு வரம்போ, மதத்தின் தளையோ கூடாதுன்னு ஒரு கவி எழுதி இருக்காரு.   காதலிக்கறவங்க மனதை மட்டுமே பார்க்கறாங்க.  இப்ப மதம் எங்க வந்திச்சு?   

பதில் – நான் தான் சொன்னேனில்லையா…. பரஸ்பர சம்மதம்னா எந்தப் பிரச்சனையும் இல்லை.  ஆனா சூழ்ச்சியால ஏன்?   ஏமாற்று எதுக்காக?  

கேள்வி– நான் தாருல் உலூம் வல்லுனர்கள் கிட்ட கேட்டேன்.  அங்க இருக்கற மௌல்வி சொன்னாரு, இது இருவரோட பரஸ்பர உறவு, ஏதோ 3-4 சம்பவங்கள்ல தவறா இருந்திருக்கலாம், ஆனா இதுக்காக யோகிஜி விஷத்தைக் கக்கறது சரியானது இல்லைன்னு அவரு சொன்னாரு.  

பதில் – ஒரு முஸ்லிம் பெண் ஒரு ஹிந்துப் பையனைக் காதலிச்சுக் கலியாணம் செய்யும் போது அதுல அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைங்கறதையும் மௌல்வி சொல்லியிருக்கணும்.   அப்ப அவரு இதுபத்தி ஃபத்வாவை அறிவிக்கணும்.   தியோபந்த் சிரியாவுலயும் ஈராக்குலயும் ஐஎஸ் ஐஎஸ் நடவடிக்கைகளுக்கு எதிரா ஃபத்வா அறிவிச்சா நல்லாயிருக்கும். 

அதுக்கு எதிரா ஃபத்வாவை அறிவிச்சாங்கன்னா, கஷ்மீர்ல நடக்கறதுக்கு எதிரா ஃபத்வாவை அறிவிச்சிருந்தாங்கன்னா நல்லாயிருந்திருக்கும்.   மொத்த தேசத்திலயும் ஏன் பொதுவான சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க தயங்கறீங்க?   பல ஆண்டுகளா இந்த துர்பாக்கியமான நிலைமை நீடிக்குது.  

இந்த தேசத்தோட பெரும்பான்மை சமுதாயம் தேசத்தில பொது சிவில் சட்டம் வேணும்னு கேட்குது.   இந்த தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம் தனக்குன்னு சிறப்பு உரிமைகள் எதையும் கேட்கலை.   

கேள்வி – இப்ப நாம பேசறது லவ் ஜிஹாத் பத்தி.  மௌலானா மதனி சொன்னதை நானும் கேட்டேன்.   இது ஜிஹாத், இது காதல்னு சொல்ல யோகி யாருன்னு கேட்டாரு.   தீர்மானிக்கணும்னு சொன்னா அதை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்கட்டும்.  

பதில் – நான் தான் 3 உயர்நீதிமன்ற தீர்ப்புக்களை சொன்னேனில்லையா?

கேள்வி – இந்துப் பெண்களை முஸ்லிம் பையன்கள் கலியாணம் செஞ்சுக்கிட்டா அது லவ் ஜிஹாத்னு சொல்றீங்க.   உங்க கட்சியோட மூன்று பத்திரிக்கை தொடர்பாளர்கள், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், எம் ஜே அக்பர் எல்லாம் இந்துப் பெண்களைத் தானே கலியாணம் செய்திருக்கின்றார்கள்!!!   அப்படியென்றால் பிஜேபியின் இந்த மூன்று செய்தித் தொடர்பாளர்களும் லவ் ஜிஹாதிக்களா?

பதில் – இல்லை, பாருங்க, இவங்க ஏமாத்திப் பண்ணலையே!!  இவங்க ஏமாத்தியேதும் செய்யலையே!!   தங்களோட இயல்பான வகையிலேயே செஞ்சாங்க.   ரெண்டாவதா, இந்த மூன்று தலைவர்களுமே, பாரதத்தின் பாரம்பரியம் மேல நம்பிக்கை வச்சிருந்தாங்க.  

திருமணம் ஆன பிறகு அவங்க தங்களோட மனைவி கிட்ட, நீங்களும் நமாஸ் படிங்கன்னு அவங்களை கட்டாயப்படுத்தலை.  அதுவரை அவங்க ஏற்றுக்காத இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளை இனிமேல் நீங்களும் கடைப்பிடிக்கணும்னு வற்புறுத்தலை.  அவங்க மேல வலுக்கட்டாயமா திணிக்கலை.   ஆனா ராஞ்சியில இப்படி நடக்கலை.   

கேள்வி –கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் என்ன கூறிக் கொள்கிறார்கள் என்பதில் நீங்கள் ஏன் குறுக்கில் வருகிறீர்கள்?

பதில் –  கோயிலுக்குப் போறாங்க.  அவங்க தீபாவளி தீபாவளியையுக் கொண்டாடறாங்க, தீபாவளியையும் கொண்டாடுறாங்க ஹோலியும் கொண்டாடறாங்க.   அப்போ, நான் ஒண்ணு கேக்கறேன், தேவ்பந்தோட மௌல்வி ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுவேன்னு ஃபத்வாவை அறிவிப்பாரா?  

தீபாவளி பண்டிகையில கலந்துக்கறது பத்தி அவரு பேசுவாரா?   அவரால செய்ய முடியாது.  அவரு செய்ய மாட்டாருன்னு தெரியும்.   ஆகையால இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாதுங்கறது பத்தி அவரால பேச முடியுமே தவிர இந்த 3 தலைவர்களும் வீட்டுல கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே!! 

கேள்வி – இப்ப ஷாருக்கான் ஒரு இந்துப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.  அதே போல ஆமிர்கானும்செஞ்சுக்கிட்டாரு.  இவங்க எல்லாரும் ஜிஹாதிக்களா?

பதில் – ஜிஹாதி பத்தி சொன்னேனில்லையா?   ஜிஹாத் கஃப்ருன்னு, நான் எதை சொன்னேன்?   யாரு….. பொய் சொல்லி வஞ்சகமா ஏமாத்தி.

கேள்வி – வஞ்சகமா இல்லையா, காதலா இல்லையான்னு யார் தீர்மானிப்பாங்க?  நீங்க தீர்மானிப்பீங்களா?

பதில் – நான் இல்லை அதாவது என்ன உதாரணம் உங்க முன்னால கண்கூடா இருக்கோ,  தேசம் நெடுக எல்லாம் வெளியாகுது, அதைத் தான் சொல்றேன்.

கேள்வி – அது பத்தின கவலையை பெற்றோர் கிட்ட விட்டுடலாமே இடையில நீங்க ஏன்?

பதில்– நாங்க…… நாங்க ஏன் இருக்கோம்னா, சமுதாயத்தோட விழிப்புணர்வுள்ள குடிமகன்ங்கற முறையில இதுக்கு எதிரா குரல் கொடுக்கறது என் கடமை இது சமூகம் சமூக கண்ணியத்துக்கு எதிரானது.   நாங்க இதுக்கு எதிரா குரல் எழுப்பியாகணும் குரலை எழுப்பிக்கிட்டு இருக்கோம்.   

கேள்வி – தியோபந்த் உலேமா இது இஸ்லாத்துக்கு எதிரான சதிங்கறாரு.  முஸ்லிங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த யோகியும் அவங்க கூட்டளிங்களும் லவ் ஜிஹாத்ங்கற பெயரை ஏற்படுத்தியிருக்காங்க அப்படீங்கறாரு.

பதில் – இந்தச் சொல்லை நாங்க யாரும் ஏற்படுத்தலை.   இந்தச் சொல் கேரளத்திலிருந்து வந்திருக்கு.   மொத்த தேசத்திலயும் கேரளம் தான் முதன்முதலா இதுக்கு இரையாச்சு.   கேரளத்துக்குப் பிறகு…. கர்நாடகம்…. உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம்.  

உத்திர பிரதேசத்திலேயே மேற்கு உத்தர பிரதேசம் அதிகமா….. பீடிக்கப்பட்ட ……. பாதிக்கப்பட்ட பகுதி.  

துரதிர்ஷ்டவசமா அங்க இப்ப அமைஞ்சிருக்கற அரசாங்கம், இந்த மாதிரியான சக்திகளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது.   ஆகையால இந்தச் சொல்லை நான் ஒண்ணும் கொடுக்கலை.  

இந்தச் சொற்கள், அங்க புழக்கதில இருந்திட்டு இருக்கு.   அதோட மேலும், இது இஸ்லாத்தின் பேரால செய்யப்படுறதால இதுக்கு ஜிஹாத்ங்கற பெயர் அளிக்கப்பட்டிருக்கு.   

கேள்வி – ஆனா நீங்க செஞ்சதோட விளைவு என்னென்னா, நீங்க சொல்ற ஏமாத்துனால இல்லாம உண்மையாவே காதலிச்சாலும் தொல்லைகள் கொடுக்கறாங்களாம்.

பதில் – தினமும் செய்தித்தாள்கள்ல வருது தினமும் நீங்களே பார்க்கறீங்க.   தினம்தினம் இந்தமாதிரி நடக்குது.  முதல்ல அவன் பெயர், ஒண்ணா இருக்கு, மாத்தப்பட்ட பெயரை கொஞ்சம் மாத்தி பிறகு ஒரு சமயம் உண்மையான பெயர் வெளியாகும் போது அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்றா.  இது தான் நடக்குது.   லவ் ஜிஹாத் பெயர்ல இது தான் நடக்குது.

கேள்வி – அப்ப நீங்க பெண்களுக்குப் புரிய வையுங்களேன்?

பதில் – நான் தான் சொன்னேனே….. மொத்த சமுதாயத்துக்கும் சொல்றேன்.  மேலும் நான் நிர்வாகம் அதிகாரிகள் கிட்டையும் சொல்றேன்.  இந்த லவ் ஜிஹாத், தேசத்துக்கு எதிரான ஒரு சூழ்ச்சி.   கேரளத்தோட முதலமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சியோட முதலமைச்சர் இதை வெளிப்படையா சொல்றாருன்னு சொன்னா, இந்த லவ் ஜிஹாத்….

இந்த தேசத்தில மதரீதியான சகோதரத்துவத்தைக் குலைக்க, மற்றும் தேசத்தை, ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாக ஆக்கும் சதியின் ஒரு அங்கம், இதைக் கண்டிப்பாக எதிர்த்தே ஆகணும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe