spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅதிமுக.,வின் 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

அதிமுக.,வின் 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான அதிமுகவின் சிறப்பு தேர்தல் அறிக்கை இது.
2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிக்கை தயாரிக்கும் போது, இதை ஒரு முறை நினைவூட்டிக் கொள்ளலாம்…
==========
தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து – இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம். ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, “நாடென்ன செய்தது நமக்கு?” என்ற நிலை மாறி, “நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:-
1. இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் :
தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம். தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.
விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
அதிமுக அரசால் பிப்ரவரி 2006ல் மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை, அதனை அடுத்து வந்த திமுக அரசு கொடுக்க மறுத்ததால், அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை அதிமுக அரசு இலவசமாக வழங்கும்.
தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு – உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் (குடிடின யீசடிஉநளளiபே யீயசமள) உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும்
20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் :
விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும்,
மொத்த விற்பனையாளர்கள், வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2. கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம் :
கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 1000 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.
“எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடாவை நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
பல்வேறு சிறப்பு கொள்கைகளின் மூலம் சர்க்கரை ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டு வரன்முறைப் படுத்தப்படும்.
புதிய எத்தனால் (நுவாயnடிட) தயாரிப்புக் கொள்கை வகுக்கப்படும். அதன் வாகனப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.
3. நுண்ணிய வேளாண்மை புரட்சித் திட்டம் :
நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
4. சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம் :
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
5. அனைவருக்கும் தரமான மருத்துவம் :
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
6. நவீன பசுமை வீடு கட்டமைப்பு :
கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் – அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை (ழுசுநுநுசூ ழடீருளுநுளு) வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.
7. இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் :
இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.
அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் 5000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்:
2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 ஆறு உருவாக்கப்பட்டு 3000 ஆறு மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.
காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் மற்றும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை எரிவாயு மின்சாரம்:
தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் (க்ஷiடி ழுயள) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வீடுகள் மற்றும் தெருக்களுக்கு சூரிய ஒளி இலவச மின்சாரம்:
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம்
தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், தமிழ் நாடு ஒருங்கிணைந்த தன்னிறைவு கொண்ட, தொடர்ச்சியான நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வழிவகை செய்யப்படும். அதற்கான தொடர் ஊக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகிற வகையில் பல புதிய திட்டங்கள் தீட்டப்படும்.
8. சிறப்பு உணவுப் பூங்கா :
குளிர்பதன கிடங்குகள் மற்றும் தொழிற்பூங்கா: விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
9. நவீன மக்கள் சந்தைகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள்:
குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.
10. பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை:
தற்போது ஏறக்குறைய பாதியாக குறைந்துவிட்ட பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு, ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கப்படும். பருத்தி விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
11. ஆடை அலங்கார பொருட்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் :
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
சணல் உற்பத்தி நவீனப்படுத்தப்பட்டு, தென்னை மட்டையின் பல்வேறு பயன்பாடுகளை கருத்தில் கொண்டு புதிய தொழில்கள் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு, அதை ஏற்றுமதிக்குரிய வகையில் மதிப்பு கூட்டி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. கைத்தறித் துறை மறுசீரமைப்பு:
நலிவடைந்த கைத்தறித் துறையை சீர்படுத்தி, கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மீண்டும் சீரமைத்து; நெசவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து; கிராமங்களில், புதிய டிசைனில் ஆடைகள், உடைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள் ஏற்றுமதிப் பொருட்களாக உருவாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
கைத்தறிப் பொருள்கள் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில், கைத்தறி ஏற்றுமதி கார்ப்பரேஷன், அரசு மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் (ஞஞஞ) உருவாக்கப்படும்.
13. மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சிக்கு தமிழகம் தயார் :
மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும்
சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
14. ஏழை மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உடனடி நடவடிக்கை:
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
15. நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்குக் கிடைக்க திட்டம்:
நகர்ப்புற வசதிகள், கிராமப்புறத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும்.
சமூக பொருளாதார வேறுபாடற்ற சமதர்ம சமுதாயம் அமைக்கப்படும்.
16. பள்ளிக் கல்வி சீரமைப்பு:
மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.
தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
பள்ளிக் கல்வியின் நடைமுறை குறைபாடுகள் சீரமைக்கப்படும். அறிவார்ந்த குழு அமைக்கப்பட்டு, திறமையை வெளிக் கொணரும் அடிப்படைக் கல்வி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பள்ளி அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்; தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
கற்றல் குறைபாடு (னுலளடநஒயை) மற்றும் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.
17. தமிழகத்தில் உயர் கல்வியை உயிர்ப்பிக்க 12 அம்ச திட்டம்:
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் தொடங்குவது பெரிதல்ல – தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், தனித் தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டம் தீட்டப்பட்டு அதன்படி பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.
18. மாணவர்களின் தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம்:
மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் தனித் திறமை பயிற்சி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும். அதன் மூலம் அவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச டுயயீவடியீ ஊடிஅயீரவநச வழங்கப்படும்.
19. மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பு: மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் (குiளா ஞசடிஉநளளiபே ஞயசமள) அமைக்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடல் மீன் பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் ஏற்றுமதி கப்பல் பூங்கா அமைக்கப்படும்.
மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.
கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
20. தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்:
தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.
அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
21. தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டம் :
தென்னை மற்றும் பனை விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவும் மற்றும் தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்து, அவர்களது தனி நபர் வருமானத்தை 3 மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் அவர்கள் வசிக்கும் பகுதியில் மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும். டெரக்கோட்டா முறையில் மண்பாண்டங்கள் செய்ய சிறப்பு தொழிற்பயிற்சி கூடங்கள் அமைத்துத் தரப்படும். செங்கல் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, ஒரு சிறப்பு குழு அமைத்து, அவர்களை கலந்து ஆலோசித்து அவர்களது பிரச்சனைகள் உடனடியாக களையப்படும்.
22. இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டம் :
படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க – அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
தமிழகத்தில் தொழில் தொடங்கும் அல்லது தொழில் நடத்தும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்தப் புள்ளிகளில் 25 சதவிகிதம் தமிழகத்தைச் சேர்ந்த இந்த புதிய மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை (ஆயசவயைட ஹசவள) பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.
23. சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்:
சுய உதவிக் குழுக்கள் சீரமைக்கப்பட்டு, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் ஏற்றுமதி நோக்கத்தோடு தொடங்கப்படும். அதில் அனைவரும் வேலை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு, அதன் லாபத்தில் பங்குதாரர்களாகவும் ஆக்கப்படுவார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு – தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.
தெரிந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும், கம்யூனிட்டி சோலார் சக்தி மையங்கள், எரிவாயு மையங்கள் உருவாக்கப்பட்டு, கிராமப்புற தெரு விளக்குகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான மின்சார வசதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதில் வரும் லாபம், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
24. தாய்மார்களுக்கு சிறப்பு சலுகை:
தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.
25. முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சிறப்புத் திட்டம்:
58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், புத்தக நிலையமும், தியான மண்டபமும், இனிமையான இயற்கை சூழலும் ஏற்படுத்தப்பட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அன்பு, பாசம் மற்றும் அறிவு பரிமாற்றம் ஏற்படும்படியாக திட்டம் தீட்டப்பெற்று, அங்கு ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற இனிமையான சூழல் ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு தொலை தொடர்பு மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக பணி செய்யும் சூழுடீ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும். அதற்குத் தேவையான நிலம், கட்டமைப்பு மற்றும் அதை நடத்த தேவையான நிதியும் தரப்படும்.
பெரிய தொழில் நிறுவனங்களின் உதவி பெற்று இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யப்படும்.
26. இலங்கை தமிழ் அகதிகளுக்கு சிறப்பு மறுவாழ்வு திட்டம் :
தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும்.
தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும். கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.
27.சுற்றுலாத் துறை மேம்பாடு:
தமிழகம் ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக ஆக்கப்படும்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தை 40 லட்சமாக உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
28. தமிழ் நாடு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை:
தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை ஞஞஞ முறையில் உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.
முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
29. தமிழ் மொழி மேம்பாடு :
தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணையதளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.
தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
30. அரசு ஊழியர் நலன் மற்றும் மின் ஆளுமை:
அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சேவை நாட்டு மக்களுக்கு முழுவதுமாக சென்றடையும் வகையில் இனிமையான, சுமூகமான சூழல் உருவாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தியாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
31. மாற்றுத் திறனாளிகள் :
மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும். அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கென சிறப்பு பயிற்சி அளித்து, அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். அதற்குரிய சிறப்பு சலுகைகள் பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும். அதற்கான அரசாணை, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்பில் செயல்படுத்தும் வகையில் சிறப்பு அனுமதி பெற சட்டம் இயற்றப்பட்டு உத்தரவு வழங்கப்படும்.
32. கேபிள் டிவி அரசுடமை :
தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
குசநந வடி ஹசை னுகூழ சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
33. தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாடு:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம். மின்அணு ஆளுமையை அரசுத் துறைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
செயல்படாத தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை மேம்படுத்தி, சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். மற்றும் தமிழக தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளித்து, தமிழ் நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிப்போம்.
மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும்.
செயல்படாத கிராமப்புற க்ஷஞடீ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற க்ஷஞடீ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும்
அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும்,
1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
34. மோனோ ரெயில் திட்டங்கள்:
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
35. திருமண உதவித் தொகை:
தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
36. காவல் துறை சீரமைப்பு:
சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களும் மின் அணு ஆளுமையின் கீழ் கொண்டுவர திட்டங்கள் தீட்டப்படும். புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.
காவல் துறைக்கு அதி நவீன பயிற்சிகள், மேலும் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும்.
காவல் துறை சார்ந்த பழைய சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, நவீன குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், நவீன வசதிகளுடன் தேவையான சட்டத் திருத்தம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறையினரின் தேவையற்ற வேலை பளுவை குறைத்து, அவர்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஏஐஞ மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழி வகை செய்யப்படும். அவர்களது பணி சார்ந்த செயல்பாடுகள் சீர்முறைப்படுத்தப்படும்.
காவல் துறையின் அதிரடிப்படை, சிறப்பு காவல் படை போன்றவைகளின் எண்ணிக்கைகள் உயர்த்தப்பட்டு, செயல்பாடுகள் நவீனபடுத்தப்படும்.
காவல் துறையினரின் குடும்ப பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை உறுதி செய்கிற வகையில் –
வாரிசுகளுக்கு வேலை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியில் மரணமடையும் காவலர்களுக்கு – கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
காவல் துறையினருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.
37. தமிழக தொழில் துறை சீரமைப்பு:
சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
நடைமுறையில் உள்ள மதுரை – தூத்துக்குடி – அருப்புக்கோட்டை காரிடார் – “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.
தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்” ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.
சிறப்பு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு, ஒற்றை சாளர முறையில் வெளிநாட்டு முதலீட்டை கவர திட்டம் தீட்டி தொழில் துறை முன்னேற்றத்திற்கு சீர்மிகு நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலம் கொடுக்கும் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட, மாற்றி அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்.
38. முதியோர், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோர் —
உதவித் தொகை:
முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.
பெண்களுக்கு, முதியோர்களுக்கு மற்றும் அனைத்து தரப்பினரும் பெற்று வரும் உதவித் தொகைகள் பரிசீலிக்கப்பட்டு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற முறையில் கூட்டி வழங்கப்படும்.
39. அரசு விடுதி மேம்பாடு :
அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,
நவீன யுக்தியோடு மேம்படுத்தப்படும்.
40. கிராம ஊராட்சி மன்றங்கள் :
கிராம ஊராட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்படத் தேவையான நிதியை மேலும் உயர்த்தி வழங்க சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு செய்யப்படும்.
41. ஊராட்சி தலைவர்கள் :
ஊராட்சி தலைவர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க பரிசீலிக்கப்படும். ஊராட்சி எழுத்தர்கள் – ஊராட்சி செயலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு ஊதிய உயர்வு அளிக்க பரிசீலிக்கப்படும்.
42. பிற மொழி பயிற்சி :
பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
43. அரசு பணி வேலை வாய்ப்பு :
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான எண்ணிக்கையில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
தற்போது அனைத்து அரசு தேர்வு நிறுவனங்களில் வெளியிடப்படாமல் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.
44. நுழைவுத் தேர்வு :
மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.
45. உழவர் பாதுகாப்புத் திட்டம் :
உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்.
46. 108 ஆம்புலன்ஸ் மேம்பாட்டுத் திட்டம் :
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
47. பள்ளியிலேயே ஜாதிச் சான்றிதழ் :
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.
48. சத்துணவு பணியாளர்களின் மேம்பாடு :
சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
49. ஊக வணிகம் :
ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
50. போக்குவரத்துத் துறை :
போக்குவரத்துத் துறை நவீனப்படுத்தப்படும். கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித் தடங்களிலும் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.
51.ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்பு:
கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக மந்திரிகளாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
52. கடலோர சாலை திட்டம் :
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.
53. திரைப்படத் துறை பிரச்சனைகளுக்குத் தீர்வு :
திரைப்படத் துறையில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும்.
54. மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் :
நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe