ஆவடி:  சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்கள் மாற்றபடாது, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே
மாற்றப்பட உள்ளது இன்று ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்

ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக 316 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்று உள்ளது இதனை அடுத்து, அந்தோணி நகர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு லாசர் நகர் பாலாஜி நகர் ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அனைவரையும் வரவேற்றார். ஆவடி தொகுதி எம்எல்ஏ அமைச்சருமான பாண்டியராஜன் கலந்துகொண்டு ஐந்து பூங்காக்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

மேற்கண்ட பூங்காக்களில் நடைபாதை, குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள், எழில்மிகு பசுமை தோட்டங்கள், இருக்கைகள், மின்விளக்குகள், நீரூற்றுக்கள் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், ஆவடி தாசில்தார் சரவணன், நகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர் சத்தியசீலன், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக, அமமுக இணைந்து செயல்பட்டால் வலிமை பன்மடங்காகும்,பிரிந்து சென்றவர்கள் இணைவதற்காக அதிமுகவின் கதவு திறந்தே உள்ளது, அவர்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தரப்பில் இணைவதற்கு அழைப்பு விடுக்கும் பொழுது உயர்மட்டகுழு ஆலோசித்து ஒன்றினைந்தால் கட்சிகும் ,தமிழகத்திற்கும் நல்லது எனக்கூறினார்.

மேலும் மூவாயிரம் ஊரின் ஆங்கில பெயர்கள் தமிழில் மாற்றி அமைக்கபட உள்ளதாகவும், சமஸ்கிருத பெயர்கள் மாற்றி அமைக்கபடவில்லை எனைவும் தெரிவித்தார். அதிமுக ஒரு சுனையுள்ள தடாகம் அதனை பாழுங்கினறு என்று கூறுபவர்கள் உள்ளே வந்து பார்த்தால் தொன்மையும், தன்மையையும் அறிய முடியும் எல்லோரும் இணைய வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனத் தெரிவித்தார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...