பொள்ளாச்சி வீடியோ: முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்!

nakkeeran gopal

பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப் பட வாய்ப்பு இருப்பதால், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, வீடியோ வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அதில் ஆஜராகாமல், வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார்.

இந்த வழக்கை அரசியலாக்கக் கூடாது எனக் கூறினாலும், திமுகவின் முழு ஆதரவாளரான நக்கீரன் கோபால், தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே திமுகவுக்கு சாதகமாக இந்த விஷயம் அமைய திட்டமிட்டு வீடியோவை வெளியிட்டதாக ஒருசிலர் கூறி வருகின்றனர். இதற்கேற்ப தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரும் அமைந்திருக்கிறது. இதன் அடைப்படையில் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜி.ராமச்சந்திரன், சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 11-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘பாலியல் கொடூரம் தொடர்பாக அமைச்சர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்து டிஜிபி.,யிடம் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில், ‘எனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கவும், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]


இதை அடுத்து, நக்கீரன் கோபால் கடந்த வெள்ளிக் கிழமை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதில், அவரது வழக்கறிஞர் சிவக்குமார், சைபர் கிரைம் உதவி ஆணையர் வேல்முருகனை சந்தித்து தகவல் தெரிவித்தார்

அதன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபால் ஊரில் இல்லை. எனவே அவர் வர இயலவில்லை. அவரது தரப்பில் சில சட்ட விளக்கங்களை சைபர் கிரைம் உதவி ஆணையரிடம் நான் கூறியுள்ளேன்.

பொள்ளாச்சி ஜெயராமன் அளித்துள்ள புகாரில் அவரையும், அவரது குடும்பத்தையும் குறித்து அவதூறான செய்திகள் பரப்பப் பட்டிருப்பதாக கூறியுள்ளார். அது அவதூறான செய்தியாக இருந்திருந்தால், சட்டப்படி அவர் மானநஷ்ட வழக்கோ இழப்பீடு கேட்டோதான் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசே சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. அவர்கள் இருவரும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில் விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும். இந்த சம்மன் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளோம் என்றார்.

ஆனால், வழக்கின் முக்கியத்துவம் கருதியும், பாதிக்கப் பட்ட பெண்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகள், வீடியோக்களை சமூகத் தளங்களில் இருந்து நீக்குவதற்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்த நெருக்கடிகள், உள்ளிட்டவை களால், நக்கீரன் கோபால் தரப்பு கூறியவை எடுபடவில்லை. இதனால், அவர் கைது செய்யப் படும் வாய்ப்பு உள்ளதால், முன் ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டிருப்பதாக செய்தி வெளியானது.


[poll id=”12″]


 

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.