ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம்
தேவையானவை:
கிரீம் – 2 கப்,
சுண்டக் காய்ச்சிய பால் – 3 கப், கண்டென்ஸ்டு மில்க் – 200 கிராம், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
அரைத்த சர்க்கரை – ஒரு கப்,
தேன் – ஒரு டீஸ்பூன், பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகள்,
சிறிய பிஸ்தா பருப்பு – தலா 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
கிரீம், பால், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து. வெண்ணெய் சேர்த்து மீண்டும் அடித்து, மூன்று மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு, இரண்டு மூன்று முறை எடுத்து அடித்து, ஃப்ரீசரில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, பாதாம், முந்திரி துண்டுகள், பிஸ்தா கொண்டு அலங் கரித்தால்… ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம் ரெடி.