
வத்தல் பொடி சாதம்
தேவையான பொருட்கள்
சுண்ட வத்தல் – 50 கிராம்
மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
மணத்தக்காளி வத்தல்-25கிராம்
உளுத்தம் பருப்பு-50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு பிடி
பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும்,