சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட சொல்வளக் கையேடு

பழக்கத்தில் உள்ள தமிழ் மொழியைத் தரப்படுத்தும் நம் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று

4000 சொற்களுடன் கூடிய புதிய தமிழ் சொல்வளக் கையேடு ஒன்று நெற்றி சிங்கப்பூரில் வெளியானது.

இங்கு பழக்கத்தில் உள்ள தமிழ் மொழியைத் தரப்படுத்தும் நம் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று. வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தேசிய மொழிபெயர்ப்புக் குழுவும் அதன் சொல்வளக் குழுவும் இணைந்து படைத்திருக்கும் இக் கையேட்டை , சுகாதார மூத்த துணை அமைச்சர் சீ.ஹாங் டாட் இந்திய மரபுடைமை நிலையத்தில் வெளியிட்டார்.

மொழிபெயர்ப்பு அனுபவம் மிக்க ஆ.பழனியப்பன் (தலைவர், தமிழ் சொல்வளக் குழுத் தலைவர்), வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர்.ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழ் மொழி வெளியீடுகளில் உள்ள பிழைகளைத் தவிர்ப்பதற்கு , அனுபவம் மிக்க மொழி பெயர்ப்பாளர்களுடன் கூராய்வாளர்களின் பட்டியலை அரசாங்க அமைப்புகளுக்கு விரைவில் வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

செய்தி ஏ.பி.ராமன், சிங்கப்பூர்