இதுதான் சமயம் என் தமிழ்நாடே…!

இலக்கியம் உரத்த சிந்தனை கவிதைகள் துணுக்குகள்

voting - 2026

இதுதான் சமயம் என் தமிழ்நாடே !
புதிய விடியலுக்கு பூபாளம் பாடு.!

ஒரு துகள் ஊழல் ஒட்டிய பேரையும்
ஒவ்வா தென்றே ஒதுக்கித் தள்ளு. !

நல்லோர் ஆளும் வகைக்குத் துணையாய்
கள்ள ஆட்சியைக் கலைத்துப் போடு !

வாக்குகள் போட்டு மூக்குகள் உடைந்தோர்
வாக்களிக் காமலே வழுக்கித் திரிந்தோர்

அரசியல் ஏனென ஒதுங்கிய அறவோர்
கரத் தூய்மை கொண்ட காளையர் கன்னியர்

அலுவலர் வணிகர் ஆடவர் பெண்டீர்
கலைஞர் கவிஞர் ஊடகப் பணியோர்

ஆற்றும் இளைஞர் அனைத்துப் பிரிவும்
ஊற்று வெள்ளம் போலணி திரள்வீர் !

தேர்தலில் உண்மைத் தேர்விருக்கட்டும்
தேர்ந்த பின் அழுகை ஆறுதல் வேண்டாம்!

வந்துள தேர்தல் வென்றிட உழைப்போம்
வராது ஊழல் எனும்வழி செய்வோம்.!

அன்புடன்
வவேசு

temple vote - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.