வாணியம்பாடியில் சுகாதாரத்துறையினரை அடித்து விரட்டி கோப்புகளை கைகளில் இருந்து பறித்து எறிந்த வாணியம்பாடி இஸ்லாமியர்கள் கைது செய்யப் பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனவன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் அந்த கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதில் முக்கியமானது டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள . இதனையடுத்து நாடு முழுவதும் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யார் என்று சல்லடை போட்டு தேடி வருகிறது.
அனைத்து மாநில காவல்துறை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 8 பேர் இருக் கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலை யொட்டி அந்த பகுதிக்கு சுகாதாரதுறையினர் கொரோனா ஆய்வுக்குச் சென்றார்கள்.
ஆனால் அங்கிருந்த சிலர் குடியுரிமை கணக்கெடுப்புக்கு வந்ததுள்ளனர் என்ற பொய் செய்தியை பரப்பியுள்ளார்கள். இதனை தொடர்ந்து சுகாதார துறை ஆய்வாளர்களை சிறை பிடித்து அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சேதப்படுத்தி யுள்ளனர் அப்பகுதி இஸ்லாமியர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக்ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேர் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் சுகாதாரத் துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா ஆய்வுக்கு சென்ற அலுவலர்களின் அடையாள அட்டையை பறித்து சிறைப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் அரசு ஊழியர்களின் ஆவணங்களை குடியுரிமை கணக்கெடுப்பு தான் என்று வம்படியாக சண்டையிட்டு கிழித்து எறிந்து அரசு ஊழியர்களை விரட்டி அடித்தனர். சிறைப்பிடிக்கப் பட்டவர்களை மீட்ட காவல்துறையினர் , இருவரை கைது செய்து தப்பி ஓடிய பலரை தேடி வருகின்றனர்.