
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 219 என்றும், 1824 நபர்கள் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது! சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களே அதிகமாக உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும் 279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இன்று விழுப்புரத்தில் 67 பேர், செங்கல்பட்டில் 40 பேர், பெரம்பலூரில் 31, திருவள்ளூரில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த பாதிப்பில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 329 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 5,752 பேர், 60 வயதை கடந்தவர்கள் 454 பேர் உள்ளனர். இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.