குடிமை உரிமையின்றி தங்கியிருந்த பயங்கரவாதியின் மனைவி!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி
salma

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானவரின் மனைவியிடம் குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால், போலீசார் கைது செய்தனர்.

வங்க தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், திருச்சி, மணிகண்டம் பகுதியில், கைக் குழந்தையுடன் தங்கியிருப்பதாக, அப்பகுதி வி.ஏ.ஓ., போலீசில் புகார் செய்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, போலீசார் விசாரித்த போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ள அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த தவ்பீக்கின் மனைவி சல்மா, 30, என்பது தெரிந்தது.

கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன், வங்க தேசத்தில் இருந்து வந்த அவர், குடியுரிமை ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ஒன்றரை வயது குழந்தையுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

இதையடுத்து, குழந்தையுடன் அவரை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், கொரோனா பரிசோதனைக்கு பின், கைது செய்தனர்.

தவ்பீக் யார் என்பது குறித்த ஒரு சிறிய முன்னோட்டம்:

சென்னை, மண்ணடியைச் சேர்ந்த திவான் அக்பர், 45, என்பவர் ஸ்கிரீன் பிரின்டிங் தொழில் செய்து வருகிறார். கடந்த, 17ம் தேதி, 2 கோடி ரூபாய் கேட்டு, மர்ம கும்பல், அவரை கடத்திச் சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக, முத்தியால்பேட்டை போலீசார், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த தவ்பீக், 36, உட்பட, ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தவ்பீக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், 2008ம் ஆண்டில், பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இவ்வாறு மற்ற நாடுகளில் இருந்து நம் நாட்டில் இருந்து கொண்டு எந்த குடியுரிமையும் இல்லாமல் நாச வேலைகளை செய்து வருபவர்களை தடுப்பதற்காகத்தான் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் இந்தியன் என்ற குடியுரிமை அவசியமாக தேவைப்படுகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் இதர நாடுகளில் இருந்து எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எவராலும் உள்நுழைய முடியாது. ஆனால் திறந்த வீட்டில் எதுவோ நுழைவது போல் இந்தியாவில் நுழைந்து முகத்திரை அணிந்து கொண்டு நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள். துரதிஷ்டவசமாக இதற்கு நம் நாட்டில் உள்ள துரோகிகளும் உடந்தையாக உள்ளார்கள். இந்தியன் என்ற பெருமையும் எழுச்சியும் நாட்டின் மீது தேசபக்தியும் கொண்டவன் இதை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டான். பிறநாடுகளிலிருந்து வந்து நம் நாட்டில் விருந்தினராக அமரலாம். ஆனால் துரோகியாக அல்ல. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்பது எங்குமே அனுமதிக்கப்பட முடியாதது. இதுபோன்ற புல்லுருவிகளை அடியோடு வேரறுக்கும் ஒரு சட்டமே என்ஆர்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.