நடுப்பகலில் சாலையில் சிறுவனை கடத்திய கும்பல்! 5 லட்சம் கேட்டு மிரட்டல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
kidnapp

சென்னையில் உள்ள தாம்பரம் முடிச்சூர் பகுதியை சார்ந்தவர் தங்கராஜ். இவர் தீபன் உணவகத்தை அப்பகுதியில் நடத்தி வருகிறார். இவருக்கு 15 வயதுடைய தீபன் என்ற மகன் இருக்கிறார். இவர் இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் கடத்தலுக்கு தயாராக இருந்த கடத்தல் கும்பல், சிறுவன் தீபனை இடைநிறுத்தி கடத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு காவல் நிலையங்களை உஷார் படுத்தியுள்ளனர்.

kidnap

இதனையடுத்து மறைமலைநகர் காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ளதாகவும், சிறுவனை மீட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

boy

மேலும், சிறுவனை கடத்திய மர்ம கும்பல் ரூ.5 இலட்சம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பட்டப்பகலில் சாலையில் சிறுவன் கடத்தப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துரிதமாக காவல் துறையினர் செயல்பட்டு, சிறுவனை மீட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.