
மதுரை அப்போலோ மருத்துவமனையில் 13 வயது சிறுவனுக்கு மூளையில் நுண்துளை ‘கிளிப்பிங்’ சிகிச்சை செய்து சாதனை படைத்துஉள்ளதாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆன்லைன் வகுப்பில்இருந்த மதுரையைச் சேர்ந்த 13 வயது சிறுவன்திடீரென மயங்கி விழுந்து, கடும் தலைவலியுடன் இங்கு அனுமதிக்கப்பட்டான்.
மூளையில்இருந்து பிரிந்து செல்லும் ரத்தக்குழாய் ஒன்றின் பக்ககுழாயில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய முடிவானது.
மூளைப்பகுதியில் நுண்துளை மூலம் வீக்கமான ரத்தக்குழாயில் நுண்ணிய ‘டைட்டானியம் ‘கிளிப்பிங்’ பொருத்தினோம். ஐந்தே நாட்களில் சிறுவன் குணமடைந்து வீடு திரும்பினான். இந்த ‘கிளிப்பிங்’கை மீண்டும் அகற்ற வேண்டியதில்லை.
சிறுவன் வழக்கம்போல செயல்படலாம். பெரியவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும். சிறுவர்களுக்கு இதன் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவுதான்.
அப்போலோ உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே நுண்துளை ‘கிளிப்பிங்’ சிகிச்சை வசதி உள்ளது என்றார்.
டாக்டர்கள் முருகன் ஜெயராமன் பேசுகையில், ”கடும் தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவமனையை அணுகினால் பக்கவாதம் போன்ற பின்விளைவுகளின்றி உயிரை காப்பாற்றலாம்.
அலைபேசியை கண்களுக்கு மிக அருகில் வைத்து பார்ப்பதை தவிர்ப்பது அவசியம்” என்றார்.டாக்டர்கள் கார்த்திக், பிரவீன்ராஜன், பத்மபிரகாஷ் உடனிருந்தனர்.