ajith8 - 2026

ஏகே61: பிரம்மாண்டமான செட்..!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith8 - 2026

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகிய வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் வரும் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.

ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மார்ச் 9-ம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9-ம் தேதி தொடங்க இருப்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

மார்ச் மாதத்தில் தொடங்கும் இந்த ஷூட்டிங் பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற நகரங்களில் படமாக்கப்பட்டு 7 மாதங்களில் ஷூட்டிங்கை முடித்து இந்த ஆண்டே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏகே 61 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் என தெரிகிறது. இதனால், இந்த வருடத்தில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உறுதி என்பதை படக்குழு சொல்லாமல் விருந்து வைக்க காத்திருக்கிறது.

ஏகே 61-க்கு முன் ‘வலிமை’ கவுண்டவுன் ஆரம்பமாகியுள்ளது. திரைப்படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.