மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் காயம்

Published:

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.ராமாபுரம் கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்து.

பேருந்தில் வந்த பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மினி பஸ்சில் நாள்தோறும் 30க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவர்கள் வேலைக்கு சென்றுவரும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் என 30க்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ராமாபுரத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த மினி பஸ் வெங்கடாபுரம் பகுதியில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் 22 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டதும் பஸ் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட்டார். இதுகுறித்து குடியாத்தம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img