விமான கியருக்கு அருகில் மறைந்து பயணித்த சிறுவன்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
flight-1
flight-1

ஏர்பஸ் ஏ-330 விமானம் துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் லண்டனிலிருந்து மாஸ்ட்ரிட்ச்சிற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் பிற்பகலில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரை இறங்கும் கியருக்கு அருகில் உள்ள பகுதியில் சிறுவன் ஒருவன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து hypothermiaயாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாஸ்ட்ரிட் ஆக்சன் விமானநிலைய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது, வழக்கமாக தரையிறங்க கூடிய கியருக்கு அருகில் மறைந்து சென்ற நபர்கள் உறைந்து உயிழந்துவிடுவார்கள் அல்லது கீழே விழுந்துவிடுவார்கள்.

ஆனால் சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ஷ்டம் தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தில் மறைந்திருந்தது கென்யாவை சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும் தற்போது மருத்துவமனையில் சிறுவன் நலமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.