துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை ஞாயிறு அன்று வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அங்கிருந்து ஊட்டி வந்து லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நயான் மறைவையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெங்கையா நாயுடு அபுதாபி செல்வதால் நாளை நடக்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மே 16ம் தேதி நீலகிரிக்கு வருகிறார். ராஜ்பவனில் தங்கும் வெங்கைய்யா நாயுடு 20ம்தேதி காலை டில்லி செல்கிறார்.
